பக்கம்:அழகர் கோயில்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கல்வெட்டுக் குறிப்புகள் 10. திருநந்தவனப்புறம்- திருவோடைப்புறம் : 279 வீரபாண்டியன் சில நிலங்களை இக்கோயிலுக்கு அடுக்களைப் புறமாக விட்ட செய்தியினை ஒரு கல்வெட்டு கூறுகின்றது. 39 மற் றொரு கல்வெட்டு சுந்தரத்தோன் விளாகம் என்ற சிற்றூர் அடுக்களைப் புறமாக விடப்பட்ட செய்தியிளைக் கூறுகிறது. 38 வைசால் கன்னடதேவன் என்ற மன்னன் தன் தம்பி (ஹொய்சன) தேவன் பெயரில் சில நிலங்களைத் திருமாலைப்புற மாக விட்ட செய்தியினை ஒரு கல்வெட்டு கூறுகின்றது. 3 காஷ்மீர தேசத்து சகவாசி பிராமணன் ராமைய தண்டநாத சொக்கையா சில நிலங்களை வாங்கித் திருமாலைப்புறமாகக் கொடுத்த செய்தி மற்றொரு கல்வெட்டால் தெரிகின்றது 40 தன் கலிகடித்த பாண்டிய தேவரான ராமன் கண்ணபிரான் திருநந்தவனப்புறமாக ஒரு தோட்டத்தை அளித்துள்ளான்.41 நந்தவனம் காப்போன் உணவுக்காக அகளங்கராயனாள சாத்தன் ஆளவந்தான் சில தானங்களைச் செய்துள்ளான்,12 தேவி தரணிமுழுதுடையாள் வேண்ட சடாவர்மன் குலசேகா பாண்டியன் திருநந்தவனப்புறமாகச் சில நிலங்களை அளித்துள் ளாள்." மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்துச் சாசனமொன்று அரசன் பெயரில் ஒரு நந்தவனம் அமைக்க நிலமளித்த செய்தியைக் குறிக்கிறது. " 45 துவரா திருநந்தவனப்புறமாகவும் திருஓடைப்புறமாகவும் பதிவேளான் அழகப்பெருமான் நிலமளித்த செய்தியை ஒரு கல்வெட்டு கூறுகின்றது. வடதலைச் செம்பிநாட்டு மதுரோதய நல்லூரான கீழைக் கொடுமலூர் நீலகங்கரையனான அரையன் திருநாடுடை யான் திருஓடை, திருநந்தவனப்புறமாக நிலமளித்த செய்தியை மற்றொரு கல்வெட்டால் அறிகிறோம்.46 11. திருவிளக்குப்புறம் : காசியபன் நாராயணன் அரைசு மனைவி சோலைசேந்த பிராட்டி ஒரு திருவிளக்குச்சட்டம் அளித்துள்ளார்.41 திருவிழா ஊர்வலங்களில் விளக்கெரிக்கத் தரப்பட்ட நிவந்தம் ஒரு வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.48 மகதநாயனார் பராக்கிரம பாண்டிய கல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/286&oldid=1468163" இலிருந்து மீள்விக்கப்பட்டது