பக்கம்:அழகர் கோயில்.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

350 அழகர்கோயில் குழந்தைகளைக் கூட்டி ராக்காயி குலவையிட்டு முன்னடந்தாள் கதவழகப் பார்க்க பொற்படியாள் வருகையிலே அங்கு காட்டுப்புறா வந்தடையும் சுருக்குவாச்சிப் பண்ணை கல்லூத்துச் சோங்குவிட்டு 180 கருப்பன் கதவநாடி கட்டழகி வரும்பாதை மாடப்புறா வந்தடையும் மாசிமலைக்காடு மாணிக்கத் தொட்டிவீட்டு மான்மயிலு தேன்கூவும் தேமாங்குயில் கூவும் தேனொழுகும் பாறை தேவி வழிநடந்தாள் மகிழம்பூப் பாறை வயித்துவலி தீத்துவைக்கும் பாறை வண்ணான் அருவி வழுக்குக் இல் மேடு 185 நளமகா ராசள் கோட்டை நாரணராயர் தெப்பம் மண்டையிடிக் கல்லு வயிராவி மண்டபம் சிறுனிப்புதரு சீகுறிஞ்சிப்பண்ணை செங்கமலக்காடு நாரண ராவர் தெப்பம் நல்லதண்ணிக் கிணறு ஊறாக் கிணறு உள்கோட்டையும் தாண்டி உக்ராணக் களஞ்சியம் அண்ணனுடைய கோட்டைவாசல் முன்ன நின்று அண்ணப்ை பாத்து ராக்காயி கோவிந்தா என்று குலவையிட்டாள் முன்னாலே 190 குலவைச் சத்தந் தான்கேட்டு தங்கச்சி மக்களையும் கோயி லுக்குள் தானழைத்து தங்கச்சி என்னை விட்டுப்பிரியாத சகோதரி கருப்பன் சகோதரி கட்டழகி ராக்காயி அண்ணா அண்ணாஎன்று ஆடிவணங்கித் தெண்டனிட அந்த தாமோதரக் கண்ணன் தங்கச்சி நம்மதம்பி மலையாள 195 கருப்பன் கதவை நீ கண்டு மனங் குளிர்ந்து மெச்ச கருப்பன் கதவு கட்டழகு பாருமம்மா என்று காயாம்பூ வழியனுப்ப ராக்காயி வடக்குக் கோட்டைவாசல் வண்ணக் குலவையிட்டாள் தெற்குக் கோட்டைவாசல் தேவி குலவையிட்டாள் கிழக்குக் கோட்டைவாசல் கெம்பீரமாய்க் குலவையிட்டாள் மேற்குக் கோட்டைவாசல் முன்ன நின்று குலவையிட்டாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/337&oldid=1468217" இலிருந்து மீள்விக்கப்பட்டது