பக்கம்:அழகர் கோயில்.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

332 தங்கச்கி ராக்காயி என்று கருப்பன் கச்சை வரிஞ்சுகட்டி கருங்கச்சை சுங்குவிட்டு அழகர்கோயில் 225 இடையிறுக்கிக் கச்சைகட்டி இந்த்ரவர்ணச் சுங்குவிட்டு தாளிறுக்கிக் கச்சைகட்டி தாமரைப்பூச் சுங்குவிட்டு கச்சை வரிஞ்சிக்கட்டி காணிக் கருப்பன் கள்ள மலையாளி கத்தி இடையிலிட்டு கட்டாரி தோளில் வைத்தான் குத்தி ஈட்டி வல்லயம் குடங்கையில் தான்செருகி 230 அந்த குடவரைக்கு முன்னே பெரியகருப்பன் கூத்தாடி முன்ன நின்று கதவடியக் காத்து முத்தையா காணிக் கருவலமே கற்படிக்குச் சேவகமே அண்ணா அண்ணாஎன்று ராக்காயி அண்ணனுட கத்தி ஈட்டி வல்லயம் கட்டாரி தோளழகை கட்டழகி தான் பார்த்தாள் சிரித்துக் குலவையிட்டாள் கெண்டை உருமா திமிக்கிவச்ச முண்டாசு 235 வட்டத் தலைப்பாவாம் கருப்பனுக்கு வடநாட்டு வல்லவட்டாம் சட்டித் தலைப்பாவாம் கருப்பனுக்கு சரிகைபோட்ட லேஞ்சி யொண்ணாம் வட்டத் தலைப்பாவாம் கருப்பனுக்கு வடநாட்டு வல்லவட்டாம் கோணத் தலைப்பாவாம் கருப்பனுக்கு கொங்குநாட்டு வல்ல வட்டாம் சீட்டித் தலைப்பாவாம் கருப்பனுக்கு செல்லநாட்டு வல்லவட்டாம் அணிந்துமே நெற்றியிலே 240 மாற்றிவைக்கும் கால்களுக்கு மாதளம்பூச் சல்லடம் தூக்கிவைக்கும் கால்களுக்கு துந்திப்பூச் சல்லடம் சல்லடமுங் கச்சையுடன் கச்சை கலகலங்க கருங்கச்சை கூத்தட்ட கருப்பனும் முன்ன நின்று கதவழகப் பார்த்தது மலையாளி கடுகி ஒரு சத்தமிட அண்ணாஉன் கதவழகப் பாத்தேனென்று ராக்காயி 245 பாலர்களோட பகுமானமாய் பாத்துக் குலவையிட்டு பாரமலை போரேவென்று பொன்ராக்கு பாரவழி நடந்தாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/339&oldid=1468219" இலிருந்து மீள்விக்கப்பட்டது