பக்கம்:அழகர் கோயில்.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிற்சேர்க்கை 111 : 3 தொழில் அட்டவணை (28-6-1803) 'திருமாலிருஞ்சோலை ஸன்னதி கைங்கர்யபராளின் தொழில் சுதந்திர அட்டவணை'மீலுள்ள தொழில் அட்டவணை மட்டும் இங்குத் தரப்பட்டுள்ளது. பணியாளர்களின் பொறுப்புக்களை விளக்கி அவர்கள் பெறும் சில சிறப்பு மரியாதைகளையும் தொழில் அட்ட வணை குறிப்பிடுகிறது. தொழில் சுதந்திர அட்டவணை பற்றிய விளக்கத்தினை கோயிற் பணியாளர்கள்' என்ற இயலில் காண்க. அடிக்கோடிடப் பட்ட செய்திகளோடு மட்டும் கோயிற்பணியாளர் உடன்பட மறுக் கின்றனர்; பிற செய்திகளோடு உடன்படுகின்றனர். ஸ்ரீ ராமஜெயம் 'ஸ்ரீ சுல்யாண சுந்தரவல்லி ஸமேத ஸ்ரீசுந்தரராஜ பரப்ரம் ஹணே நம: திருமாலிருஞ்சோலைமலை ஸன்னதி கைங்கர்யபராளின் தொழில் அட்டவணை ருத்ரோத்காரி-வரு ஆனி-மீ 16-உ க்கி 1803 வரு. ஜூன் மீ உபய வேதாந்த 29 ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவிறாஜகாசாரிய பிரவர்த்தக மத்தகஜகணிரவ ஸ்ரீவிசிஷ்டாத்வைத சித்தாந்த நிர் வாஹக ஸ்ரீ சைத்திறாஷாட சேஷாவாஹன பிர்மஹாதிருட தென் கொள் திசைக்கு நிலகமாய் நின்ன தென் திரும்பதி திருமாலிருஞ் சோலைமலை என்னும் அழகர் திருமலை சந்நிதிக்கி ஸ்ரீகாரியம் விசாரணை தர்மகர்த்தா மடாதிபதி ஸ்ரீராமானுஜ ஜீயர் ஸ்வாமிகள் கும்பினி சர்க்காரில் ஆக்ஞாபித்து உத்தரவாகி இருக்கிற பிரகாரம் இந்த சன்னதிக்கு அனாதிகாலமாக யேற்பட்டு நடந்து வருகிற 32 நிர்வாகத்தினுடைய கைங்கர்ய விபரத்துக்கும் ஸ்தலத்தார் நிர்வா ஹக்காரர்கள் அடைந்துகொண்டு வருகிற சுதத்திரம் வகையறா வுக்கும் ஆதிகாலத்து வழக்கத்தையும் நீடித்த மாமூலையும் அனு சரித்து சந்நிதி கருவேலம் முதலான இடங்களில் பிரகிருதத்தில் இருந்து கொண்டிருக்கிற கோயில் வரலாரும் கோயில் ஒழுகு தாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/350&oldid=1468231" இலிருந்து மீள்விக்கப்பட்டது