பக்கம்:அழகர் கோயில்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொழில் அட்டவணை 351 முதலியதுகளுக்கு கூடயிருந்து செய்கிறது. (நித்தியப்படி சந்நதி திருமண்டபம். சுத்துகோவில், சன்னதிகள், பிராகாரம் லாஹன மண்டபம் பெருமாள் எழுந்தருளக் கூடிய இருமண்டபங்கள் திருவாசல் திருவீதி முதலிய இடங்களையும் புண்ணியாவாசனம் பண்ணுகிறது ) யாகசாலை ஹோமம் முதலிய வைதீக காரியங்களுக்கு வேண்டிய சாமக்கிரியை தெர்ப்பம் ஸமித்து வகையறா சேகரித்து கொடுக்கிறது. சீாந்தி சாம்புரோக்ஷணை முதலியதுகள் கூடயிருந்து செய்கிறது பிறதிதினம் சன்னதி முன்னிலையில் பஞ்சாங்கம் வாசிக்கிறது. எல்லா விசேஷ உத்ஸவாதிகளுக்கும் தினப்பத்திரிகை முகூர்த்தப் பத்திரிகை பஞ்சாங்கம் வகையறா யெழுதிக் கொடுக்கிறது. குக்தாதி உபநிஷத்து புஷ்பாஞ்சலி, வேதவிண்ணப்பம், பிரபந்தம், முதலியது ஸேவிக்கிறது. எல்லா அவசரங்களிலும் பெருமாளுக்கு பின்னாலே கோஷ்டியாயிருந்து அதிகப்படி (12) திருநாமங்களை வைத்துக்கொண்டு ருக்குவேதபாறாயணம். யெஜுர்வேதபாறாயணம், சாமவோத பாறாயணம் பாறாயணங்களை செய்கிறது. நித்தியப்படி எல்லா திருநாமங்களுக்கும் சாத்துபபடிக்கி திருயங்ஞோபவீதம் குடுத்து வருகிறது. பெருமாள் திருக்கல்யாணம் மாஹோத்ஸவத்தில் புது பஞ்சாங்கம் வாசிக்கிறது.அருதி பரிவட்டம் மரியாதையும் அடைகிறது. (6) திருப்பணி செய்வார் நிர்வாஹம். மாசம் 30 நாளைக்கு நிர்வாகம் 1 . தன்னுடன் உதவிக்கு (3) பேர் வைத்துக் கொண்டு முன்சொல்லியபடி சூக்தாதி உபநிஷத்து புஷ்பாஞ்சலி வேதவிண் ணப்பம் பிரபந்தம் வேதம் ஸேவிக்கிறது. திருப்பணிமாலை ஸ்தல புராணம் படிப்பு முதலியது வாசித்து வருகிறது. எல்லா சந்நதி விமானங்களிலும் முளைக்கிற திருவரசு வகையறாக்களையும் தல்லாகுளம் கோவில் விமானத்திலும் வெட்டுகிறது. எல்லா அவச ரங்களிலும் எல்லா திருநாமங்களும் யெழுந்தருளக்கூடிய தோளுக்கு இனியான் சிம்மாசனம் திருமஞ்சனம் வீதி சின்ன திருப்பல்லக்கு பெரிய திருபல்லக்கு சேஷவாகனம் முதலிய எல்லா வாகளங்களை யும் இணக்கிச் சேர்க்கிறதும் வாகனங்களின் சாமான் வகையறா யாவற்றும் துறம் கைங்கரி சாமான்களையும் வாஹனாதிகளின் பிரபைபட்டு மெத்தை திண்டு தலகாணி மேல் கட்டி ஜோடனை உபசார சாமான்களையும் கையாக்ஷயில் வைத்துக்கொண்டு அடிக்கடி கண்பார்த்து எடுத்துக்குடுத்து வாங்கி வைக்கிறது. வாஹனம் ஆயுநம் வகையறாக்களை அடிக்கடி சுந்தப்படுத்தச் செய்கிறது. விசேஷ பிரம்ஹ உத்ஸவாதிகளுக்கு அங்குறார்ப்பணத்துக்கு புத்து மண் மஞ்சள் 'பொடி மரப்பொடி வகையறா சாமக்கிரிகளை சந்ததி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/358&oldid=1468241" இலிருந்து மீள்விக்கப்பட்டது