பக்கம்:அழகர் கோயில்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெள்ளையத்தாதர் வீட்டுப் பட்டய நகல்ஓலை 873 திருமாலை ஆண்டார், பட்டர் ஐயங்காள் என்பன இயற்பெயர் அல்ல. இரண்டும் அழகர்கோயிலில் இரண்டு பபமரீவுகளின் பெயர்களாகும். அச்ச்சகப் (பட்டர்) பணியில் உள்ள நால்வரில் பட்டயம் குறிப்பிடும் பட்டர் யாரெனத் தெரியவில்லை. பட்டயநகல் ஓலை பிழை மலிந்ததாக உள்ளது. எனவே சில செய்திகள் தெளிவாக விளங்கவில்லை. பெயர்களும் தவறாகக் குறிக் கப்பட்டுள்ளன. பட்டயம் குறிப்பிடும் ஊர்கள் மானாமதுரைக்கும் மேலூர் வட்டம் உறங்கான்பட்டி-வெள்ளலூர்க்கும் இடையிலுள்ளவை யாகும். செய்திச் சுருக்கம் : திருமாலை ஆண்டாருக்கும் பட்டர் ஐயங்கார்க்கும் ஏற்பட்ட பூசலில் மானாமதுரை (வானறவீரன் மதுரை) யில் சமரசத்துக்காக ஒரு பஞ்சாயத்து நடந்தது. அவ்வூர் மக்கள் பட்டர் ஐயங்காருக்குச் சாதகமாக இருபபாதைத் தெரிந்துகொண்ட திருமாலை ஆண்டா ருடைய ஆட்கள் பஞ்சாயத்தில் கலவரம் செய்துவிட்டு ஓடிவந்து விட்டனர். தொடர்ந்து பெரியகோட்டை (சிவகங்கையிலிருந்து எட்டுகல் தொலைவிலுள்ள ஊர்) மில் இரண்டு நரப்பு ஆட்களும் மோதிக்கொண்டதில் பட்டர் ஐயங்காருடைய ஆட்கள் மூவர் இறந்து காபர் பட்டவர் விட்டனர்; பத்துப் பேர்வரை காயம் பட்டளர் களோடு பட்டர் ஐயங்கார் சிவகங்கை மன்னர் முத்துவடுகனாத துரையிடம் வந்து முறையிடுகிறார். மன்னர் "உனக்குப் பழிக்குப் பழி வாங்கி தருகிறேன்" என்று பட்டரி ஐயங்காரிடம் சொல்லிலிட்டுச் சினத்துடன் தன்னுடைய பிரதானி தாண்டவராயபிள்ளையைத் திரு மாலை ஆண்டாரையும் அவர்கஎையுடைய ஆட்களையும் பிடித்து வரச் சொல்லுகிறார். அந்த நாட்களில் திருமாலை ஆண்டாரும் அவருடைய ஆட்களும் வெள்ளலூர்ப் பகுதியில் சுற்றிக்கொண்டி ருக்கின்றனர். பின்னர் ஆட்களுடன் தங்களைப் பிடிக்கலந்த தாண்டவ ராயபிள்ளையிடம் காலந் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர் பின்னர் இறந்துபோன மூவர்க்காகப் பழிக்குப் பழியாக ஆண்டாரின் சமய டி தாரில் ஒருவரான வெள்ளையத்தாதன் தன்மகனையும் தன் தம்பி மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வத்து, தாண்டவளாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/380&oldid=1468262" இலிருந்து மீள்விக்கப்பட்டது