பக்கம்:அழகர் கோயில்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 அழகர்கோயில் சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம் என்று இத்தல முடைய மலையிளைக் குறிக்கின்றார்." சீர்கெழுதிருவில்' எனும் பகுதிக்குப் பரிமேலழகர், "அழகு பொருந்திய திருவென்னும் சொல்லோடும் சோலையென்னும் சொல்லோடும் மாலிருங்குன்ற மென்னும் சொல் தொடர்ந்த மொழியாகிய 'திருமாலிருஞ்சோலை மலை' யென்னும் நாமம்" என்று உரையெழுதுகிறார்.15 திருமா லிருஞ்சோலை என்னும் பெயர் வழக்கு, இளம்பெருவழுதியார் காலத்தேயே வந்துவிட்டதென்னும் அவர் கருத்து ஏற்புடையதே. இருப்பினும் 'இருங்குன்றம்' எனும் பெயரே முதலில் பெருக வழங் கியதென்பதை அநே பாடலில் வேறு நான்கு இடங்களில் அப்பெயர் பயன்படுத்தப்பட்டமையால் அறியலாம். மதுரையைச் சுற்றிலுமுள்ள எட்டு சமணத் திருத்தலங்களைக் கூறும் தனிப்பாடல் ஒன்று இம்மலையை 'இருங்குன்றம்' என்றே குறிப்பதும் 16 இக்கருத்துக்கு அரண் செய்கிறது. சமண முனிவர் தங்கிய மலைக்குகை இன்றும் பிராமிக் கல்வெட்டுக்களோடு இக்கோயிலுக்கருகில் உள்ளது. சிலப்பதிகாரம் 'இருங்குன்றம்' என்னும் பெயரைக் குறிப் பிடவில்லை. 'திருமால் குன்றம்' என்றே இம்மலையைக் குறிக்கி றது.19 முதலாழ்வார் மூவருள் ஒருவரான பூதத்தாழ்வார், இருஞ் சோலை', 'இருஞ்சோலைமலை' என்று இம்மலையைக் குறிக்கின் றார். கி. பி, ஏழாம் நூற்றாண்டினரான பெரியாழ்வாரும் ஆண்டாளும், சோலைமலை, மாலிருஞ்சோலை, திருமாலிருஞ்சோலை, தென்திரு மாலிருஞ்சோலை ஆகிய பெயர்களால் இம்மலையை அழைக்கின் றனர். பின்னர் வந்த நம்மாழ்வாகும் திருமங்கையாழ்வாரும் அப்பெயர்களையே பயன்படுத்தியுள்ளனர். 13 சிம்மாத்திரி, கேசவாத்திரி, வாசவுத்யானமலை முதலிய பெயர்களை இம்மலைக்கு வழங்கும் சிற்றிலக்கியங்கள் அவற்றை விளக்கவும் முற்படுகின்றன. ஆயினும் இப்பெயர் வழக்குகள் அதிகமாகக் குறிக்கப்படாதவையே. “தடமிசை யாவருஞ் சஞ்சரிக் காமையால் வடிவுசேர் சிங்க மலையெனப் பகர்வார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/39&oldid=1467897" இலிருந்து மீள்விக்கப்பட்டது