பக்கம்:அழகர் கோயில்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை கோயில் பற்றிய ஆய்வுகள் நாட்டு வரலாற்றாய்வாக மட்டு மன்றிச் சமூக, பண்பாட்டாய்வுகளாகவும் விளங்கும் நிறமுடையன. தமிழ்நாட்டில், கோயில்களில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் தரும் செய்திகளும், கோயில்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைச் சிறப்பு களுமே பெரிதும் ஆராயப்படுகின்றன. கே.கே. பிள்ளையின் 'சுசீந்திரம் கோயில்', கே.வி. இராமனின் 'காஞ்சி வரதராஜஸ்வாமி கோயில்' ஆகிய நூல்களும், சி.கிருஷ்ணமூர்த்தியின் 'திருவொற்றியூர்க் கோயில்' எனும் அச்சிடப்படாத ஆய்வு நூலும் குறிப்பிடத்தகுந்த வையாகும். தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வுத்துறையினரும் திரு வெள்ளறை. திருவையாறு ஆகிய ஊர்க்கோயில்களைப் பற்றி நூல்கள் வெளியிட்டுள்ளனர். இவையன்றி ஒரு கோயிலுக்கும் அதனை வழிபடும் அடியவர்க் கும் உள்ள உறவு. கோயிலைப்பற்றிச் சமூகத்தில் வழங்கும் கதைகள். பாடல்கள். வழக்குமரபுச் செய்திகள், அக்கோயிலை ஒட்டி எழுந்த சமூக நம்பிக்கைகள், திருவிழாக்களில் அவை வெளிப்பயடும் விதம் ஆகியவை பற்றிய ஆய்வுகள் தமிழ்நாட்டில் பெருகி வளரவில்லை பினாய் குமார் சர்க்கார் என்பவர் கிழக்கிந்தியப் பகுநிகளில் கொண் டாடப்பெறும் 'கஜல்', 'கம்பீரா' எனும் இரண்டு திருவிழாக்களை மட்டும் ஆராய்ந்து 'இந்துப் பண்பாட்டில் நாட்டுப்புறக் கூறுகள்’ எனும் ஆங்கில நூலை 1917-இல் எழுதினார். இவ்வகையான ஆ வு நெறி தமிழ்நாட்டில் பிள்ளைப்பருவம் தாண்டாத நிலையிலேயே உள்ளது. நோக்கம் 'அழகர்கோயில்' என்பது இந்த ஆய்வின் தலைப்பாகும். இக் கோயில் மதுரைக்கு வடகிழக்கே பன்னிரண்டுகல் தொலைவிலுள்ளது. கோயில்கள் வழிபடும் இடங்களாக மட்டும் ஆகா. அவை சமூக நிறுவனங்களுமாகும். எனவே சமூகத்தின் எல்லாத்தரப்பினரோடும் கோயில் உறவு கொள்கிறது. ஒரு குறிப்பிட்ட கோயிலோடு அரசர் களும் உயர்குடிகளும் கொண்ட உறவினைப் போலவே, ஏழ்மையும் எளிமையும் நிறைந்த அடியவர்கள் கொண்ட உறவும் ஆய்வுக்குரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/4&oldid=1467863" இலிருந்து மீள்விக்கப்பட்டது