பக்கம்:அழகர் கோயில்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 " ......... எங்கோமான் அழகர்கோயில், மேய்த்த நிரைபோல வெற்புகளெல் லாஞ்சூழ வாய்த்த திரையில்ஒரு மால்விடையாய்ப் பார்த்திடலால் இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும்பேர் மன்னிய சோலைமலை 24 என்று அழகர் கிள்ளைவிடு தூது 'இப்பெயர் பிறந்த காரணத்தைக் குறிப்பிட, அழகர் குறவஞ்சியோ, தரும தேவன்முன் தவம்புரி வாய்மையால் திருநாமம் இடபாத் திரியெனப் புகல்வார்" '25 என்கிறது. இக்கோயில் தலபுராணமும் இந்த இரண்டு காரணங் களையே இப்பெயர் பிறந்த காரணமாகக் கூறுகின்றது. "இந்த 'விருஷபம்' என்ற கிரிக்கு இதர பர்வதங்களை யெல்லாம் ஒப்பிடுகையில் அவைகளெல்லாம் கேவலம் பசுக்கள் போலாகின்றன... மேலும் யமதர்மன் 'விருஷ' என்ற தர்மரூபத்தோடு 5பசு புரிந்து பசுவானிடத்தில் இம்மலைக்கு 'விருஷபாத்ரி, என்று பெயரிடும்படி பிரார்த்தித்தாள் "26 என்கிறது தலபுராணம். இப்பெயர் வழக்குப்பற்றி சைவ நூலான பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற் புராணத்திலும் ஒரு செய்தியினைக் காண்கிறோம். *'சமணர் ஏளிய மாயப்பசுவினை அழிக்கச் சிவபெருமான் தன் அதிகார நந்தியினை ஏவினார். அது தன் அழகினைக் காட்டி மாயப்பசுவினை மய்க்கி ஆற்றலை இழக்கச் செய்தது. ஆற்றலை இழந்த பசு கீழே எழுந்து மலையாயிற்று. பீன் நந்தியாகிய விடையும் தன் உருவினை இடபக்குன்றாக நிறுவிளிட்டுச் சூக்கும உருவில் சிவபெருமானை யடைந்தது. தோல்வியுற்ற சமணர் கூட்டங்கள் சூரியன்முன் இருளாக நீங்கின”27 என்பது திருவிளையாடற் புராணத்தின் 'மாயப்பசுவை வதைத்த படலம்• கூறும் செய்தியாகும். இப்புராணம் இம்மலையின் பெயர்ப் பிறப்புக்குச் சைவச்சளர்பான விளக்கத்தினைத் தருகிறது. விடைமலை எனப்படும் இடபக்குன்றுக்குச் சமண எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கிருந்தது என்பதை மேற்குறித்த புராணக்கதை தெளிவாக விளக்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/41&oldid=1467899" இலிருந்து மீள்விக்கப்பட்டது