பக்கம்:அழகர் கோயில்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் 41 'திருமாலிருஞ்சோலை நம்பி' என்ற ஆண்டாளின் பாசுரத் தொடருக்கு."ஆரியர்கள் இகழ்ந்த மலேச்ச பூமியிலுள்ளார்க்கு ஸூலபனானவன்" எனப் பெரியவாச்சான்பிள்ளை உரையெழுதுவர்.55 சீராரும் மாலிருஞ்சோலை' என்ற திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல் அடிக்கு, "ஆர்யர்கள் இகழ்ந்த தெற்குத் திக்கிலே அங்குந்தை ஸ்தாவரங்களோடும் தன்னோடும் வாசியற நின்று ம்லேச்சர்க்ககப்பட முகங்கொடுக்கும் நீர்மையுடையவனாய் இருக்கின் றானிறே' என்பது அவர் தரும் உரை விளக்கம் ஆகும், 39 பாசுரங் கள் கூறும் பெயர்களுக்கு இவ்வளவு விளக்கமெழுத ஒரு காரணம் இருந்திருக்கவேண்டும். பாசுரங்களில் வெளிப்படையாகக் காணமுடி யாத சில செய்திகளை உரை வெளிப்படுத்த முயல்கிறது. ஆர்யர்கள் இகழ்ந்தது தெற்குத் திக்கையா, திருமாலிருஞ்சோலையையா? ஏன் இகழ்ந்தனர்? மலேச்சர் யார்? ஆகிய கேள்விகளை இவ்வுரைப்பகுதி நம் மனத்திலே தோற்றுவிக்கின்றது. "தென்கொள் திசைக்குத் திலகமாய் நின்ற திருமாலிருஞ்சோலை நங்கள் குன்றம் கைவிடான் நண்ணா அசுரர் தலியவே,' '00 என்பது நம்மாழ்வாரின் திருவாய்மொழியாகும். தென்திசை பற்றிய உரையாசிரியர் கருத்து நம்மாழ்வார் கருத்தோடு முரண்படுகிறதா? 'நங்கள் குன்றம் கைவிடான்' எனில் கைவிடச் செய்ய முயன்றவர் யார்? நண்ணா அசுரர் யார்? ஆகிய கேள்விகளுக்கும் விடை காண வேண்டும். இவ்விடத்தில் மனங்கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. பக்தி இலக்கியங்கள் எழுந்த காலத்தில் தமிழ்நாட்டில் சைவமும் வைணவமும் புறச் சமயங்களை எதிர்த்து நின்ற செய்தி வெளிப் படையானதே. ஆனால் புறமத எதிர்ப்பில் ஆழ்வார் காலத்துக்கும் முன்னரே வைணவம் முனைந்து நின்றதற்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்று சான்றாகிறது. புறநானூற்றில் 166 ஆம் பாடல், சோணாட்டு பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயனை ஆவூர் மூலங்கிழார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/48&oldid=1467906" இலிருந்து மீள்விக்கப்பட்டது