பக்கம்:அழகர் கோயில்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

2 அழகர்கோயில் கருப்பொருளாக முடியும். அவ்வகையில் அழகர்கோயிலோடு அடிய வர்கள் குறிப்பாக நாட்டுப்புறத்து அடியவர்கள் கொண்டுள்ள உற வினை விளக்க முற்படும் முன் முயற்சியாக இந்த ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது. இந்த உறவின் வளர்ச்சியில் கோயிலின் பரம்பரைப் பணியாளர்க்கும் பங்குண்டு என்பதால் அவர்களும் உளப்படுத்தப் பட்டுள்ளனர். அழகர்கோயில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் பழமை சான்ற ஒன்றாகும். இக்கோயிலுக்கு மதுரை மாவட்டத்தின் சில பகுதிகளோடு முகவை மாவட்டத்தின் தெற்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான நாட்டுப் புற அடியவர்கள் வருகின்றனர். பொதுவாகச் சமூகத்தோடும், குறிப் பாகச் சிறுதெய்வநெறியில் ஈடுபாடுடைய சாதியாரோடும் இப் பெருந்தெய்வக்கோயில் கொண்டுள்ள உறவினையும் உறவின் தன்மை யினையும் விளக்க முற்படுவதே இந்த ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும். ஆய்வுப் பரப்பு இக்கோயிலை ஒட்டிய நிலப்பரப்பில் வாழும் வலையர், கள்ளர் ஆகிய சாதியாரோடும், கோயிலுக்கு வரும் அடியவர்களில் பெருந் தொகையினரான அரிசனங்கள், இடையர் ஆகிய சாதியாரோடும். கோயிற் பணியாளரோடும் இக்கோயில் கொண்டுள்ள உறவு தமிழ் நாட்டு வைணவ சமயப் பிள்ளணியில் ஆராயப்பட்டுள்ளது. சமூக ஆதரவினைப் பெறுவதற்காகத் தமிழ்நாட்டு வைணவம் சிறுதெய்வ வழிபாட்டு நெறிகளுக்கு நெகிழ்ந்து கொடுத்த நிலையும் *கோயிலை முன்னிறுத்தி விளக்கப்பட்டுள்ளது. ஆய்வு மூலங்கள் பட்ட சமூக நிறுவனமாகிய கோயில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் சாதியாரோடு கொண்ட உறவினையறியக் கல்வெட்டுக்கள் போதிய அளவு துணை செய்யவில்லை. இக்கோயிலைப் பற்றிய இலக் கியங்களும். கோயிலில் காணப்படும் நடைமுறைகளும், திருவிழாச் சடங்குகளும், திருவிழாக்களில் வெளிப்படும் கதைகள். பாடல்கள், நம்பிக்கைகள் முதலியனவும், ஆய்வாளர் களஆய்வில் கண்டுபிடித்த இரண்டு செப்பேடுகளும், செப்பேட்டு ஓலைநகல் ஒன்றும் ஆய்வு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/5&oldid=1467862" இலிருந்து மீள்விக்கப்பட்டது