பக்கம்:அழகர் கோயில்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 அழகர்கோயில் திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் திருமாலின் வீரதீரச் செயல் களையே இப்பாசுரங்களில் பேசுவது கருதத்தக்கது. பெரியாழ்வார் இத்தலம் குறித்துப் பாடிய இருபது பாசுரங்களில் 'இம்மலை திருமாலுக்குரியது' எனும் கருத்தையே மீண்டும் மீண்டும் முதல் இரண்டு அடிகளில் பேசுகின்றார்.69 திருமாலின் பெருமைகளாக இப்பாசுரங்களில் அவர் கூறுவதெல்லாம் மாற்றார்க்கு அச்சம் விளைவிக்கும் திருமாலின் வீரதீரச் செயல்களே. ஆகவே உரையாசிரியர்களின் கருத்துப்பின்னணியில் நோக்கும் போது, இந்நலம் குறித்த ஆழ்வார்களது பாசுரங்களில் உரிமை யுணர்வும் போராட்ட உணர்வுமே நிறைந்திருக்கின்றன. தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் அழகர்கோயில் மிகப் பழைய திருப்பதியாகும். சிலப்பதிகாரத்தில் திருவேங்கடம், திரு வரங்கம் தவிர, குறிக்கப்பட்டுள்ள வைணவத் திருப்பதி இதுவே யாகும். வைணவர்களிடமும் தென்தமிழ்நாட்டுத் திருப்பதிகளில் மிகுந்த ஏற்றத்தைப் பெறுவது இதுவே. "தென்திசையில் திருப்பாற்கடலும், திருமாலிருஞ்சோலையும் என் தலையும். இடமாகக் கொண்டான் திருமால்” என இத்தலத்தின் பெருமையினைக் குறிப்பர் நம்மாழ்வார். 70 இத்தலத்தினைப் பற்றி நம்பிள்ளைஈடு தரும் மற்றொரு செய்தியும் இங்குச் சிந்திக்கத்தக்கது. 'திருமாலிருஞ்சோலைக் கோனேயாகி' எனும் தொடருக்கு ஈடு தரும் விளக்கம் இது: "இரண்டு உலகங்களையும் உடையனாய் இருத்தலால் வந்த ஏற்றத்துக்கும் அவ்வருகே ஓர் ஏற்றம் போலாயிற்று, திருமலையை (அழகர் மலையை) யுடையனாய் வந்த ஏற்றமும், இவரைப் பெற்ற பின்பே காக்கும் தம்மை நிறைந்ததாயிற்று. இல்லையாகில் ஸ்ரீவைகுண்டத் தில் இருப்போடு திருமலையில் (வேங்கடமலையில்) நிலையோடு வாசியற்றுப் போமேயன்றோ!"i1 இத்தலத்தின் ஏற்றத்தைப் புலப்படுத்தும் இவ்வுரைப் பகுதி மற்றொரு குறிப்பைப் பெறவும் துணை செய்கிறது. 'இவரைப் பெற்றபின்பே காக்கும் தன்மை நிறைந்ததாயிற்று' என்று உரையா சிரியர் இம்மலையைக் குறிப்பதனால், இம்மலை இவ்வழகரைப் பெறாத காலமும் ஒன்றுண்டு எனும் கருத்து புலப்படுகிறது. ஆழ்வார்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/51&oldid=1467909" இலிருந்து மீள்விக்கப்பட்டது