பக்கம்:அழகர் கோயில்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் 45 இடஉரிமையுணர்வுப் பாசுரங்களை இக்கருத்தோடு இணைத்துப் பார்ப்பதால் சில செய்திகள் தெளிவாகின்றன. ஆழ்வார்கள், சைவக்குரவர்கள் காலத்திற்கு முன்னர் தமிழ் நாட்டில் சமணமும் பௌத்தரும் வலிவு பெற்றிருந்தன. இக் காரணத்தால் வைதீக சமயத்தினரான ஆர்யர்கள் (பெரியோர்கள்) தெற்குத் திக்கினை இகழ்ந்தனர். திருமாலிருஞ்சோலைப் பகுதியிலும் சமண பௌத்தர்கள் இருந்தமையால், இது 'ம்லேச்சபூமி' என்ற நிலையில் இருந்தது. திருமால் இத்தலத்தில் கோயில்கொண்டு அசுரர்களான புறமதத்தினர் முடிந்து போகும்படி இம்மலையில் விடாதே வசித்தார். இக்கோயிலுக்குக் கிழக்கே ஏறத்தாழ ஒருமைல் தொலைவில் இம்மலையில் சமண முனிவர்கள் தங்கியிருந்த ஒரு குகை கல்வெட்டுக் களோடு உள்ளது. இதில் காணப்படும் ஒரு வட்டெழுத்துக் கல்வெட்டு கி.பி. எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினதாகலாம். எனவே அக்காலத்திலும், அவர்கள் அங்கிருத்திருக்க வேண்டும். அழ் பார்களின் பாசுரங்களில் காணப்படும் எதிர்ப்புணர்வுக்கு இப் பகுதியில் வசித்த சமண-பௌத்தர்களை அவர்கள் எதிர்த்தது காரண மாகலாம். உரையாசிரியர் காலம்வரை இந்த எதிர்ப்புணர்வு வைணவர்களிடம் தொடர்ந்து நிறைந்திருந்ததால், பாசுரங்களில் மறைந்திருந்த உணர்வுகளை அவர்கள் உரையில் வெளிப்படுத்திக் காட்டினரெனலாம். மொத்தத்தில் சமண-பௌத்த எதிர்ப்பில் இத்தலத்தின் பங்கினைத் திருமாலிருஞ்சோலை குறித்த பாசுரங்களும் அவற்றிற்கான உரைகளும் நன்கு வெளிப்படுத்திக் காட்டுகின்றன. 3.12 திருவிழாச் செய்திகள்: இக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா சித்திரைத் திருவிழாவாகும். அழகர் அந்தாதி. அழகர் கலம்பகம், சோலைமலைக் குறவஞ்சி, அழகர் பிள்ளைத்தமிழ், திருமாலிருஞ் சோலை பிள்ளைத் தமிழ், அலங்காரர்மாலை ஆகியவை சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளைக் குறிப்பிடவே இல்லை. அழகர் கிள்ளைவிடு தூது திருவிழா நிகழ்ச்சிகளைப் பாடுகிறது. அழகர் மதுரைக்கு வருதல், திருக்கண்களில் இறங்குதல், வண்டியூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/52&oldid=1467910" இலிருந்து மீள்விக்கப்பட்டது