பக்கம்:அழகர் கோயில்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்கியங்களில் அழகர்கோயில் 47 வில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டிலெழுந்த அழகர் குறவஞ்சி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலெழுந்த சோலைமலைக் குறவஞ்சி. திருமாலிருஞ்சோலை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களும் கோயிலோடு கள்ளர் சாதியார்க்குரிய உறவினை ஓரிடத்தில்கூட குறிப்பாகவேனும் சொல்லவில்லை. ஆசிரியர் பெயர் தெரிந்த சிற்றிலக்கியங்களில், அழகர் கிள்ளை விடு தூது நூலாசிரியர் சாதியால் வேளாளராவார். ஏனையோர். அனைவரும் பிராமணர்களே. நாட்டுப்புற மக்களே பெருவாரியாகக் கலந்துகொள்ளும் சித்திரைத்திருவிழா நிகழ்ச்சிகளை அவர்கள் பாடாமைக்கு அவர்களின் உயர்சாதி மனப்பான்மை காரணமாயிருக் கலாம் எனத் தோன்றுகிறது. 'தொள்ளங்காது கள்ளர் நாடு' என ஓரிடத்தில் சோலைமலைக் குறவஞ்சி குறிப்பிட்டாலும், 71 கன்ளர்க்கும் கோயிலுக்குமுள்ள தொடர்பினைக் கூறவில்லை. அழகர் குறவஞ்சி சோலைமலைக் குறவஞ்சி, திருமாலிருஞ்சோலை பிள்ளைத்தமிழ் ஆகிய நூல்களின் ஆசிரியர்கள் கடத்த தூற்றைம்பது ஆண்டுகளுக்குள் வாழ்ந்தவர்கள். எனவே அவர்கள் கோயிலோடு கள்ளர் கொண்ட' தொடர்பினை அறியாதவராயிருக்க முடியாது. அறிந்த செய்தி களையே அவர்கள் பாடாது ஒதுக்கியுள்ளனர். இரண்டு குறவஞ்சி நூல்களும் குறத்தியின் குறிமுகத் தெய்வமாகப் பதினெட்டாம்படிக் கருப்பனைக் குறிப்பிடுகின்றன. சோலைமலைக் குறவஞ்சி, மலையீதுள்ள ராக்காயி அம்மனைக் குறத்தி வணங்கும் சக்கதேவி யாகவும் குறிப்பிடுகிறது. 12 பிற சிற்றிலக்கியங்கள் இத்தெய்வங் களைக் குறிப்பிடவில்லை. முடிவுரை: 28 இத்தலம் குறித்த பரிபாடல், திருமாலும் பலராமனும் இக் கோயிலில் ஒன்றாக வழிபடப்பெற்ற செய்தியினை நமக்குத் தருகிறது. இத்தலத்தைப் பாடிய ஆழ்வார்களின் பாசுரங்களும், அவற்றிற்கான உரைகளும் தமிழ்நாட்டில் சமண, பௌத்த எதிர்ப்புணர்ச்சி நிறைந் திருந்த காலத்தையும், சமண, பௌத்த எதிர்ப்பில் இக்கோயில் பெற்றிருந்த பங்கினையும் காட்டுகின்றன. தலவிருட்சம், விமானத்தின் பெயர் முதலியவை பிற்காலத்தெழுந்தவை என்பதைச் சிற்றிலக் கியங்களே அவற்றை முதலிற் குறிப்பிடுவதாலறிகிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/54&oldid=1467912" இலிருந்து மீள்விக்கப்பட்டது