பக்கம்:அழகர் கோயில்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

56 அழகர்கோயில் அப்போது பட்டத்திலிருந்த கிஷ்ணமாசாரியார் இருபத்துமூன்றாவது தலைமுறையினர் ஆவார். அவர் 1976 இல் காலமானதும் 1976 இல் இருபத்து நான்காவது தலைமுறையினராகப் பட்டத்துக்கு வந்த அவரது மருகர் சந்தான கிருஷ்ணமாசாரியர் 1977 இல் காலமானார். இவர்க்கு வாரிசில்லை. எனவே இந்நிருவாகம் கோயில் ஆட்சித் துறையில் சேர்ந்துவிட்டது. 'திருமாலை ஆண்டான்' பரம்பரையினர் இக்கோயிலில் மொத்தம் இருபத்து நான்கு தலைமுறையாகத் தொடர்ந்து பணிபுரிந்து வந்திருக்கின்றனர். மேற்குறித்த சிறுநூலில், பதினான்கு தலைமுறையினர்க்குரிய வடமொழியிலமைந்த ஒவ்வொரு தனியனும், தமிழிலமைந்த வாழித் திருநாமங்களும் உள்ளன. ஏழாவது, ஒன்பதாவது. பதின்மூன்றாவது முதல் பத்தொன்பது (7, 9.13-19) வரையிலான தலைமுறையினர்க் சூரிய தனியன்களும் வாழித் திருநாமங்களும் காணப்படவில்லை. தெரியவில்லை' என்ற குறிப்பு மட்டும் தரப்பட்டுள்ளது. ஆழ்வார்கள். ஆசாரியர்கள் வாழ்க்கைக் குறிப்புக்களைச் சுருக்கமாகக் கூறும் பெரிய திருமுடியடைவு, வாமநாம்ஸ பூதரான திருமாலையாண்டானுக்குத் திருவவதார ஸ்தலம் அழகர்கோயில். திருநக்ஷத்ரம் ஸர்வதாரி வருஷம் மாசி மாஸத்தில் மகம். திருநாமங்கள் மாலாதார், ஸ்ரீஜ்நாநபூர்ணர். குமாரர் சுந்தரத் தோளுடையார். திருவாராதனம் அழகர். ஆசார்யர் ஆளவந்தார். சிஷ்யர் ஸ்ரீபாஷியகாரர். இருப்பிடம் அழகர்கோயில் என்று குறிப்பிடுகிறது.10 திருக்கோட்டியூர் நம்பி பணித்ததின்பேரில் இராமானுசர். திருமாலையாண்டானிடமே திருவாய்மொழி என்னும் பகவத் விஷயத்தைக் கேட்டறிந்தார். ஆண்டார் பரம்பரையின் முதல்வரான இவரைப் பற்றிய வாழித் திருநாமங்கள், "தேசுபுகழ் ஆளவந்தார் திருவடியோன்zi என இவர் ஆளலந்தாரின் மாணவராக விளங்கியதையும், '"திண்பூதூர் மாமுனிக்குத் திருவாய் மொழிப்பொருளை உண்மையுடன் ஓதியருள் சீர்18 என இவர் இராமானுசர்க்குத் திருவாய்மொழி கற்பித்ததையும் குறிப்பிடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/63&oldid=1467921" இலிருந்து மீள்விக்கப்பட்டது