பக்கம்:அழகர் கோயில்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

5.1.0. 5.1. கோயிலும் கள்ளரும் அழகர்கோயில் இறைவன் 'கள்ளழகர்' என்ற பெயரிலேயே இன்று அழைக்கப்படுகிறார். 'திருமலைநம்பிகள் என்னும் பணிப்பிரிவினரின் வசமுள்ள கி.பி. 1863ஆம் ஆண்டைச் சேர்ந்த ஓர் ஆலயத்தின் மூலம் கி.பி. 1815இல் இக்கோயில் 'கள்ளழகர் கோயில்' எனக் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகின்றது. இப்பெயர் வழக்குக் குறித்த முதல் ஆவணச்சான்று இதுவேயாகும். 5.1.1. கள்ளழகர் என்னும் பெயர் : சென்னையில் கீழ்த்திசைச் சுவடி நூலகத்திலுள்ள 'திருமா லிருஞ்சோலைமலை அழகர்மாலை என்னும் கையெழுத்துப்படி (manuscript) நூல்; கள்ளக்குலத்தார் திருப்பணி வேண்டிய 'கள்ளழகா' என்றும், 'கள்ளர்க்குரிய அழகப்பிரான்' என்றும். இப் பெயரினையும், பெயருக்குரிய விளக்கத்தினையும் தருகிறது.' இத் தலம் குறித்தெழுந்த பாசுரங்களிலும் பாசுர உரைகளிலும் பிற் காலத்தெழுந்த சிற்றிலக்கியங்களிலும் இப்பெயர் காணப்படவில்லை. ஆனால் நாட்டுப்புற மக்களால் பாடப்பெறும் வர்ணிப்புப் பாடல்களில் இப்பெயர் காணப்படுகிறது.3 5.1.2. 'கள்ளர் திருக்கோலம்': இக்கோயில் சித்திரைத் திருவிழா அழைப்பிதழ், அழகர் மதுரைக்கு வருவதை "ஸ்ரீசுந்தரராஜன் 'கள்ளழகர்' திருக்கோலத் துடன் மதுரைக்கு எழுந்தருளுகிறார் எனக் குறிப்பிடுகிறது. அழைப்பிதழின் நிகழ்ச்சி நிரலில் இத்திருக்கோலம், ! கள்ளர் திருக் கோலம்' என்று குறிப்பிடப்படுகிறது. 5.1.3. கள்ளர் திருக்கோலத் தோற்றம்: ஒரு கையில் வளதடி எனப்படும் வளரித்தடி. மற்றொரு கையில் வளரித்தடியும் சாட்டைக்கம்பும், ஆண்கள் இடுகின்ற ஒரு வகையான கொண்டை, தலையில் உருமால், காதுகளில் அடிப் புறத்தில் கல்வைத்துக்கட்டிய வளையம் போன்று கடுக்கன்- இவற் 'றோடு 'காங்கு' எனப்படும் ஒரு கறுப்புப்புடைவை 54 கணுக்கால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/76&oldid=1467937" இலிருந்து மீள்விக்கப்பட்டது