பக்கம்:அழகர் கோயில்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கோயிலும் கள்ளரும் 79 சேர்ந்தவரே பங்குபெறுகின்றனர். பிற ஊர்க்காரர்களுக்கு அவ்வுரிமை இல்லை. மாங்குளத்துக் கள்ளர்க்குக் கோயில் நடைமுறையில் இன்னு மொகு உரிமையும் உள்ளது. பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான பரகாலன் என்னும் திருமங்கை மன்னன் 'ஏள்ளா' சாதியைச் சேர்ந்தவர். திருமணக்கோலத்தில் மனிதனாய் வந்த திருமாலை வழிமறித்துக் கொள்ளையிட முனைந்தபோது திருமால் இவர்க்குத் திருவடிப்பேறு காட்டி அடியாராக்கினார். திருமங்கை மன்னன் திருமங்கை ஆழ்வாரானார். 'திருமங்கையாழ்வார் வேடுபறி' என்னும் திருவிழா நிகழ்ச்சி பெரிய வைணவக் கோயில்களில் நடந்துவரு கிறது. அழகர்கோயிலில் மார்கழி மாதத்தில் அந்திருவிழா நடத்தும் பொறுப்பு வெள்ளியக்குன்றம் ஜமீன்தாருக்கு இருந்ததை. "திருமங் கையாழ்வார் லீலைபாகம் நடப்பிலித்து" என்று திருமலை நாயக்கள் பட்டயம் குறிப்பிடுகிறது.26 இன்றளவும் அத்திருவிழாவில் கள்ளர் வேடம் பூண்டு அதற்கான கோயில் மரியாதைகளை மாங்குளத்துக் கள்ளர்களே பெறுகின்றனர். தொழில் சுதந்திர அட்டவணை மார்கழி மாதத்தில் திரு அத்யயன உற்சவத்தில் பங்குபெறும் கள்ளர்க்குரிய உரிமையினை "மாங்குளம் வகையறா கள்ளர் நோை எனக் குறிக்கிறது: சித்திரைத் திருவிழாவிலும் மாங்குளம் கிராமத தார்க்குந் தோசை உரிமை உண்டு என்றும் குறிக்கிறது. 27 மாங்குளம் கள்ளரில் பொன்னம்பலப் புவியன், ஆனைவெட்டி தேவன். ஒஞ்சியர், வப்பியர் ஆகிய பிரிவினரும், வடக்குந்தெரு அஞ்சாங்கரை அம்பலம் என்ற பிரிவினரும் ஆக ஐந்து பிரிவீனர் அழகர்கோயிலில் வேடுபறித் திருவிழாவில் பங்குகொள்வதற்கான பரிவட்ட மரியாதையினை மாறிமாறிப் பெற்றுவருகின்றனர். கோயில் தவிர, நாட்டுக்கள்ளரில் மாங்குளம் கிராமத்தாருக்கு மட்டும் ஒரு பழைய எல்லைக்குள் இரணியன் வாசலருகில் மண்டாம் உரிமையாயுள்ளது. சித்திரைத் திருவிழாவில் இறைவனின் ஆடை, அணிகலப் பெட்டியினை மதுரைக்குத் தூக்கிவரும் உரிமை யும் மரங்குளத்தாருக்கே உண்டு. மேலும் சில ஆண்டுகட்கு முன்வரை மதுரை செல்லும் வழியில் அழகர் இறங்கும் திருக்கண்கள் (மண்டபங்கள் தோறம், நான்கணா வசூலிக்கும் உரிமையும் மாங்குளம் கிராமத்தாருக்கு இருந்திருக்கிறது.28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகர்_கோயில்.pdf/86&oldid=1467947" இலிருந்து மீள்விக்கப்பட்டது