பக்கம்:அழகு மயக்கம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{{|106||}}

 iv

கடிகத்தின் ஒவ்வொரு சொல்லும் முக்கியமானது. ஒவ்வொரு சொல்லும் அக்காரியங்களேச் சாதிக்கப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும்.

பாத்திரங்களின் தன்மை அவர்களுடைய சம் பாஷணை வாயிலாகவும், கடத்தை வாயிலாகவுமே வெளியாக வேண்டும். தானே பேசுதல், நெஞ்சசொடு கிளத்தல் என்ற முறையிலே தன்மை வெளியாவது அவ்வளவு சிறப்புடையதல்ல. அவை செயற்கை முறைவாகவே அமைக் திருப்பதை நாம் எளிதில் காணலாம். மேலும் ஒரு வகை உான தன்மையுடையவன் ஒரு குறிப்பிட்ட சக்தர்ப்பத்திலே எவ்வாறு கடந்துகொள்கிருன் என்பதையும் சுவை பட ஓரங்க நாடகத்தில் எடுத்துக் காட்ட வேண்டும். இவற்றையெல்லாம் அந்தக் குறுகிய எல்லேக்குள்ளே செய்து முடிக்கவேண்டியிருப்பதால்தான் ஒரங்க நாடகத்தில் ஒவ்வொரு சொல்லும் ஆழ்க்க குறிப்புடையது என்று கூறினேன். சொல் மட்டுமல்ல, பாத்திரங்களின் சிறிய செயல்களும் குறிப்புடையவைதான்.

ஓரங்க நாடகத்தை நடிப்பதிலே நடிகர்கள் பெரிதும் எச்சரிக்கையாக இராவிட்டால் நாடகத்தின் உட்கருத்தைப் பூரணமாக நன்கு வெளிப்படுத்த முடியாது. இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு நடைபெறும் பெரிய நாடகத்தில் பாத்திரங்களுக்குத் தமது தனித் தன்மையை உணர்த்த அவகாசம் அதிகமாயிருக்கிறது. அதில் கூடக் குறிப்பிட்ட முக்கிய சந்தர்ப்பங்களே கன்கு பயன்படுத்திக் கொள்ளாவிடில் சுவை கெட்டுப்போகும். ஓரங்க கடகத்திலே இதை இன்னும் கன்ருக மனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

ஓரங்க காடகத்தைப் படிக்கும்போதும் இந்த எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது அவசியந்தான். மேல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/6&oldid=1298556" இலிருந்து மீள்விக்கப்பட்டது