பக்கம்:அழகு மயக்கம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V

போக்காகப் படித்துக்கொண்டு போனல் அதன் உட் கருத்து முழுவதையும் அறிந்து சுவைக்க முடியாது. பாத்திரங்களோடு நின்று நிதானமாகப் பழகவேண்டும். அப்பொழுதுதான் அவர்களின் போக்கும் செய்கையும் பளிச்சென்று விளங்கும்.

         ஓரங்க நாடகத்தை மேடையேறி நடிக்கும் பழக்கம் நம் நாட்டில் இன்னும் ஏற்படவில்லை என்றுதான் கூற வேண்டும். அவைகள் இன்று ரேடியோவில் இடம் பெற்றிருக்கின்றன: ஓரளவு வெற்றியும் அடைந்திருக்கின்றன. அங்கே வெற்றி பெறுவது மேடையிலும் வெற்றிபெறும் என்பதில் ஐயமில்லை. ஆனல் மேடையில் நடிக்கப்பெறும் நாடகத்திற்கும், ரேடியோ நாடகத்திற்கும் பல வேறுபாடுகள் உண்டு. ரேடியோ நாடகம் பாத்திரங்களை நேரில்காண்பது அவர்களுடைய குரலையும் பேச்சையும் கேட்கும் முறையிலே அமைந்திருக்கிறது. காலம், இடம் முதலியவற்றின் தோற்றங்களையும் குறிப்பாகப் பேச்சின் மூலம் காண்பிக்கலாமே மொழிய நேரீல் காணச் செய்ய இயலாது. மேடை நாடகம் அவ்வாறல்ல. இவ்வேறுபாடுகளை மனத்தில் கொண்டு, எதிரே தோன்றி நடிப்பதற்கு ஏற்றவாறு ஒரங்க காடகங்களை அமைத்தால் மேடை மீதும் அவை சிறந்த வெற்றிபெறும். வேஷம், மேடையின் பின்ன ணிக் காட்சி முதலியவைகளும் அவ்வெற்றிக்கு உதவியாககிற்கும்.
         ஆண் பெண் உறவிலே ஆயிரம் ஆயிரம் விதமான மனப் போராட்டங்கள் எழுகின்றன. சந்தர்ப்பம் ஒன்றக இருந்தாலும் மக்களின் தன்மைக்கேற்ப நடத்தைகள் மாறுபடுகின்றன. அவற்றை யெல்லாம் பல வேறு கோணங்களிலிருந்து மறைமனக் கோளாறுகளோடு பொருத்தி ஆராய்ந்து படம் பிடித்துக் காண்பிப்பது கலைஞனுடைய தொழில். எத்தனை கோணங்களிலிருந்து
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழகு_மயக்கம்.pdf/7&oldid=1520265" இலிருந்து மீள்விக்கப்பட்டது