பக்கம்:அழியா அழகு.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடைகொண்ட குகன் 93.

கட்டித் தீனியோடுவது போன்ற சங்கடத்தில் மாட்டிக் கொள்ளல் கூடும். குகன் அப்படி எண்ணவில்லை. தான்

கூறுவதை உணர்ந்தே கூறினன். அவன் அவற்றை எண்ணியே பேசினன் என்பதைப் பேச்சினிடையே உள்ள குறிப்புகள் புலப்படுத்துகின்றன.

தன் பேச்சில் கம்பிக்கையை உண்டாக்க, பொய்ம்: முறை இலரேம்' என்ருன் இராமன் விரதம் குலையாது என்பதை உணர்த்த, புகலிடம் வனமேயால் என்ருன்.. அவன் வாழ்க்கைக்கு ஏற்ற பொருள்கள் அங்கே கிடைக் கும் என்பதை உணர்த்த, குறைவிலெம்’ என்ருன், வேறு. வகையான பொருள்கள் வேண்டுமாயின் அவற்றைக் கொணர்வதற்கும். இடையூறு ஏதேனும் நேர்ந்தால் பாது, காப்பதற்கும் உரிய ஆற்றல் தங்களிடம் உண்டென்பதை உணர்த்த, வலியேமால்' என்ருன் காட்டரசனுக்கு. அவன் ஏவலர்கள் செய்யும் குற்றேவல் வகைக்கும் காட்டர சனுக்குரிய குற்றேவல் வகைக்கும் வேறுபாடு உண்டு; அவற்றை கான் கன்கறிந்திருக்கிறேன். அந்த முறை தவருமல் இங்கே காங்கள் எவல் புரிவோம்' என்பதைப் புலப்படுத்த, "செய்முறை குற்றேவல் செய்குதும்' என்ருன்.

அங்கே தங்குவதற்கு என்ன உரிமை இருக்கிறதென்ற கேள்விக்கு, கம்மிடையே ஓர் உறவு உண்டு என்று விடை கூற வருகிருன். காங்கள் உபசாரம் செய்கிருேம்; தாங்கள் அதனைப் பெறுகிறீர்கள் என்ற முறையில் அமைந்ததன்று இந்த உறவு காங்கள் எவலர்கள். தாங்கள் எங்களுக்குத் தலைவர். இந்த உறவே தாங்கள் தங்கும் உரிமையைத் தருவது' என்று தெரிவிப்பதற்காக, "அடியோமை இம் முறை உறவென்ன" என்ருன். "கெடிது எம் ஊர் இரு' என்று சொல்லுகிருன் குகன், இந்தப் பதினன்கு ஆண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/101&oldid=523303" இலிருந்து மீள்விக்கப்பட்டது