பக்கம்:அழியா அழகு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அழியா அழகு

பார்கள். அயல் வீட்டில் கொலை கடந்தாலும் ஏனென்று கேட்கமாட்டார்கள். ஆனல் தம் கால ஒருவன் மிதித்துவிட் டால் போதும்; உடனே அவன் தலையை வாங்க முந்துவார் கள் இத்தகைய சிலையில் உள்ளவர்களையும் "உசுப்பிவிட' வேண்டும் என்று குகன் கினைத்தான்போலும்! அவர்களுக் கும் உறைக்கும்படி இப்போது நிகழ இருப்பதை எடுத்துக் காட்டுகிருன். #

"சிலர், "இந்த வழக்கு யாருக்கும் யாருக்குமோ இடை யில் நிகழ்வது' என்று கினைக்கலாம். அப்படி அன்று. கம் முடைய சொந்த உரிமை பறிபோகும் கிலே வந்திருக்கிறது. ஒருவன் தன் காட்டை வேறு ஒருவனுக்குக் கொடுத்து விட்டுப் போனன். அப்படிப் போனவன் எனக்கு வேண்டி யவன். அவன் இங்கே வந்து நம்முடைய ஆட்சிக்கு அகப் பட்ட காட்டில் வாழச் சென்ருன். நாம் ஆளும் காட்டில் அவன் நம்முடைய அன்பனகையால் வாழ்கிருன். இப்போது இவன், என் நாயகனத் தரத்த வருகிருன். தன்னுடைய சொக்த காட்டை இவனுக்குத் தந்துவிட்டு வந்தவன் அவன். அவன் இப்போது இருக்கும் இடத்துக்கும் இவனுக்கும் ஒரு தொடர்பும் இல்லே. இது நம்முடையது; கம் ஆட்சிக்கு உட்பட்டது; நாம் ஆளும் காடு. இதையும் அவனுக்குக் கொடுக்கக் கூடாது என்று இவன் படையெடுத்து வந்திருக் கிருன் காம் ஆளும் காட்டுக்குள் அவனே வாழ விடாமல் துரத்த இவன் யார்? இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதல்ை நம் உரிமை பறிபோக வில்லையா?" என்ற பொருளே அமைத்துப் பேசுகிருன். கம்பனுடைய பாடலில் இரத்தினச் சுருக்கமாக அந்த வாதம் அமைந்திருக்கிறது.

'காடு கொடுத்தளன் நாயக னுக்கிவர்

காம்ஆளும் காடு கொடுக்கில ராகி எடுத்தது

காணிரோ?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/128&oldid=523330" இலிருந்து மீள்விக்கப்பட்டது