வியப்பும் உருக்கமும் . 137
வபுகழையும் நீ உன் புகழாக்கிக் கொண்டாய்' என்று மேலும் குகன் பரதனைப் புகழ்ந்தான். இப்படிப் பலவற்றைச் சொல்லிப் பரதனுக்குரிய மரியாதைகளைக் குகன் செய்தான். இராமனுடைய குணங்களே உணர்ந்து அவனிடம் அன்பு செய்த குகன். பரதனுடைய நல்லியல்புகளே உணர்ந்து, அவனிடமும் பேரன்பு உடையவனன்ை.
என இவை அன்ன மாற்றம்
இயைவன பலவும் கூறிப் புனைகழற் புலவு வேற்கைப்
புளிஞர்கோன் பொருவில் காதல் அனையவற் கமைவிற் செய்தான்;
ஆரவற் கன்பி லாதார்? கினைவருங் குணங்கொ டன்ருே
இராமன்மேல் நிமிர்ந்த காதல்? !
(என்று இவைபோன்ற பொருத்தமான வார்த்தைகள் பலவற்றையும் சொல்லி, புனேந்த கழலையும் ஊன் காற்றம் விசும் வில்லேயுடைய கையையும் பெற்ற வேடர் தலைவ கிைய குகன், ஒப்பில்லாத காதலையுடைய அந்தப் பரத ஆணுக்குப் பொருத்தமாக உபசாரம் செய்தான். அவனிடத் தில் அன்பு இல்லாதார் யார்? இராமன்மேல் சிறந்து சென்ற அன்பு, கினேவதற்கரிய அவனுடைய குணங்களைக் கொண்டன்ருே') .
இவ்வாறு கவியின் கூற்ருகக் கம்பன் ஒரு பாடலே அமைக்கிருன் பரதனை, பொருவில் காதல் அனையவன்" என்கிருன். காதல் என்றது இராமபிரான்பால் அவனுக்கு இருந்த அன்பை, அதுதான் குகன். அவனிடம் கண்டு கொண்ட குணம்,
1. குகப்படலம், 37.