பக்கம்:அழியா அழகு.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குகன் பண்பு 147

அவள் இரக்கம் இல்லாதவளானலும் குகன் அவளேத் தாயென்றே தொழுதாளும். 'தன் நல்ல கையால் தொழுதான்’ என்று கவிஞன் கூறுகிருன். அவ்வளவு நல்லவனுகிய பரதன் தன் தாயை இழித்துக் கூறிலுைம் குகன் அவளை இழிவாக இப்போது கருத வில்லை என்ற குறிப்பையே அந்தச் சொற்கள் காட்டு கின்றன.

யாவரும் கரையை அடைந்தனர், குகன், பரதன் முதலியவர்களோடு சித் திர கூடத்தை அடைந்து இராமனைக் கண்டு தொழுதபின் மீளும்போது தானும் விடை பெற்றுக் கொண்டு சிருங்கிபேரபுரம் வந்தடைந்தான்.

奪 穆 臺

கதைப்போக்கில், இராமபிரானுடைய காட்டு வாழ்க் கையின் தொடக்கத்தில் குகனே அறிமுகம் செய்துவைக் கிருன் கம்பன். இராமனை அவன். முதல் முதலில் கண்டு அவனிடம் ஈடுபட்டதையும். பரதனைக் கண்டு முதலில் ஐயுற்றுச் சினம் அடைந்து பின்பு அவன் மெய் இயல்பறிந்து விம்மிதம் அடைந்து உருகியதையும் பார்த் தோம்.

பிறகு சுந்தரகாண்டத்தில் சிதாபிராட்டியின் எண்ணக் கோவையிலே குகன் வருகிருன். அசோகவனத்தில் இருந்து துயர்க்கடலில் ந்ேதிககொண்டிருந்த சீதை, இராமனுடைய இயல்புகளேயும் செயல்களையும் எண்ணிப் பார்க்கிருள். பல கிகழ்ச்சிகள் அவள் உள்ளத்தே காட்சி அளிக்கின்றன, மனத்தின் இயல்பை நன்குணர்ந்த கம்பன், அவள், நிகழ்ச்சிகளே முறைப்படி எண்ணுவதாக அமைக்க வில்லை. முன்னும் பின்னும் மாறி மாறி அவள் எண்ணு கிருள். பலருக்கும் தெரிந்தவற்றையும் தான்மாத்திரம் நுட்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/155&oldid=523357" இலிருந்து மீள்விக்கப்பட்டது