பக்கம்:அழியா அழகு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரதனும் குகனும் 15霄

சீர்த்தியான் என்று பொதுவாகக் கம்பன் சொல்லியிருக்' கிருன். அவர்களுடைய வணக்க முறைகளே மூன்று வேறு வகையில் குறிக்கிருன். தொழுதான். வணங்கினன். அடி வீழ்ந்தான் என்ற மூன்றும் வணக்க வகைகளைக் குறிக்கின்றன.

இங்கே நிகழும் நிகழ்ச்சிகள் மூன்று வகையாக இருத்தல் கூடும். குகனும் பரதனும் ஒருவர் அடியில் ஒருவர் வீழ்தல், குகன் அடியில் பரதன் மாத்திரம் வீழ்தல். பரதன் அடியில் குகன்மாத்திரம் வீழ்தல் என்ற மூன்று காட்சிகளில் ஏதாவது ஒன்று இங்கே சிகழ்ந்திருக்க வேண்டும். ஒருவரும் அடி விழவில்லை என்று சொல்ல இயலாது. 'அடி வீழ்ந்தான்' என்று பாட்டில் வருவதல்ை யாராவது ஒருவரேனும் மற்றவர் காலில் விழுந்து பணிக் திருக்க வேண்டும்.

பின்னே, பரதன் தான் வந்த காரியத்தைச் சொன்ன வுடன் அதனைக் கேட்ட குகன் உணர்ச்சி விஞ்சிப் பரதன் காலில் விழுவதாகக் கம்பன் பாடுகிருன்.

கேட்டணன் கிராதர் வேந்தன்

கிளர்க்தெழும் உயிர்ப்ப கிை மீட்டும்மண் ணதனில் வீழ்ந்தான், !

என்பதில், மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான்' என்று. கூறுவதல்ை முன் ஒரு முறை அவன் பரதன் அடியில் விழுந்து பணிந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. ஆகவே முன்சொன்ன மூன்று நிகழ்ச்சிகளில், பரதன் மாத்திரம் குகன் காலில் விழுவது என்பது விலக்கப் பெறுகிறது. எஞ்சிஜிருப்பவை இரண்டு; குகன் மாத்திரம் பரதன்

1. குகப்படலம், 34.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/165&oldid=523367" இலிருந்து மீள்விக்கப்பட்டது