பக்கம்:அழியா அழகு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அழியா அழகு

காலில் விழுந்தான், அல்லது இருவரும் ஒருவரை ஒருவர் அடி வீழ்ந்து பணிந்தார்கள். இந்த இரண்டு வகையிலும் இந்தப் பாட்டிற்குப் பொருள் கொள்ளலாம்.

இருவரும் அடிபணிந்து கொண்டார்கள் என்று பொருள்கொள்வோர் உரை கூறும் முறை வருமாறு:

வந்து - (ஒரு தனியே தான் வந்தவனகிய குகன்) பரதன் அருகில் வந்து. எதிரே தொழுதானே - எதிரே திசை நோக்கித் தொழுதுகொண்டிருந்த பரதனை வணங் கின்ை - காலில் விழுந்து பணிந்தான். மலர் இருந்த அந்த ணனும் தனே வணங்கும் அவனும் -தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமதேவனும் தன்னே வணங்கும் சிறப் புடைய அந்தப் பரதனும். அவன் அடி வீழ்ந்தான் - குகனு: டைய திருவடியில் விழுந்து பணிந்தான் தகவுடையோர் சிங்தையினும் சென்னியினும் வீற்றிருக்கும் சீர்த்தியான் - தக்கவர்களின் எண்ணத்திலும் (வணங்குவதால்) தலையிலும் வீற்றிருக்கும் சிறப்புடைய குகன். தந்தையினும் களி கூர் - தங்தையை விடக் களிப்பு மிக, தழுவினன் - பரதனைத் தழுவிக்கொண்டான்.

அடுத்த பாட்டு, "தழுவின புளினர் வேந்தன் தாமரைச் செங்களுனே'க் கேட்பதாக வருகிறது. தழுவின புளினர் வேந்தன்' என்று குகனேக் குறிப்பதனால் தழுவியவன் குகன் என்று தெரிந்துகொள்ளலாம் என்பர். -

இனி.குகன் மாத்திரம் அடி வீழ்ந்தான் என்று பொருள் கொள்ளும் வகை வருமாறு: -

வந்து எதிரே தொழுதானே - வந்து எதிரே தொழுத குகனே. மலர் இருந்த அந்தணனும் தன வணங்கும் அவனும் வணங்கின்ை - பிரமதேவனும் வணங்கும் பரதனும் தலே வளைந்து வணக்கம் புரிந்தான். அவன் - குகன். அடி வீழ்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/166&oldid=523368" இலிருந்து மீள்விக்கப்பட்டது