பக்கம்:அழியா அழகு.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அழியா அழகு

இறைவனுடைய முழுத் தன்மையையும் தாம் வழிபடும் உருவத்திலே காணுமல் இருக்கலாம். ஆயினும் அவர்கள் இன்பம் பெறுவதில் தடை இல்லை.

கங்கைநீர் எடுத்து வரலாம் என்று பல மங்கை மார் பாத்திரங்களே எடுத்துக்கொண்டு போகிருர்கள். ஒருத்தி குடமும் ஒருத்தி தவலையும் ஒருத்தி பானையும் ஒருத்தி செம்பும் எடுத்துச் செல்கின்றனர். யாவரும் தாம் கொண்டு சென்ற பாத்திரங்களே கிறைத்துக் கொண்டு வருகிரு.ர்கள். அவர்கள் பாத்திரங்கள் பூரண மாயின. ஆனல் கங்கையைப் பூரணமாக அவர்கள் கொண்டுவர வில்லை. யாருமே கொண்டுவருவ தில்லை. அவரவர்கள் தம் பாத்திரம் நிறைந்ததென்று இன்புறலாம்.

அவ்வண்ணமே வெவ்வேறு உருவத்தில் பரம் பொருளே முறையாக வழிபடுகிறவர்கள் மன நிறைவு பெறுகிருர்கள். அவர்களுடைய அன்புக்கு இலக்கான உருவங்கள் வேறு. வேருனலும் அவர்கள் அடைகின்ற அநுபவம் கிறைந்தது;. ஒரே தன்மையது.

இந்த உவமையை மிதிலே நகரில் இராமனேக் கண்ட பெண்களின் கிலேயோடு பொருத்திப் பார்க்கலாம். இராமனுடைய தோளைக் கண்டவர்கள், தாளேக் கண்ட வர்கள், தடக்கையைக் கண்டவர்கள் யாவரும் ஒரு வகை மனநிறைவை எய்தினர்கள். அவர்களுக்கு இன்ப அநுபவம் உண்டாயிற்று. அவர்கள் கண்ட அங்கங்களில் வேறுபாடு இருந்தாலும் அடைந்த அநுபவத்தில் வேறுபாடு: இல்லை. யாவரும் தம் முன் கின்ற பேரழகைக் கண்ணுல் நுகர்ந்து ஆழ்ந்து தம்மை மறந்து இன்புற்றனர். முறிையில் வேறுபட்டாலும் அநுபவத்தில் யாவரும் ஒரு தகையின்ரே என்பதைச் சொல்லவந்த கம்பன், உவமை வாயிலாக, எந்தச் சமயமானலும் முறையாகப் புகுவாருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/18&oldid=523220" இலிருந்து மீள்விக்கப்பட்டது