பக்கம்:அழியா அழகு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதியின் பிழை 177

(வளர்ந்து எழுகின்ற பெரிய பழியாகிய செயல் முடிப்பதற்குக் காரணமான வெய்ய விதி தூண்டத் தன் சொல்லச் சொல்லத் தொடங்கினுள் 1

உறங்கும் கைகேயியை எழுப்பாமல் அவள் போயிருக்க லாம். பின்பு சொல்லலாம் என்ற எண்ணத்தோடு அவள் போயிருந்தால், அவள் உள்ளம் பின்பு ஆறியிருக்கலாம். ஆனல் விதி அவ்வண்ணம் உள்ள வேறு வழியில் விகழ்ச்சி களேச் சொல்லவொட்டாமல் தடுக்கிறது; சொல், சொல் என்று அவளைத் துரண்டுகிறது.

"உனக்குப் பெரிய துன்பம் வந்திருக்கவும் வரும் தாமல் தூங்குகிருயே!' என்கிருள் கூனி.

"என் குழந்தைகள் செவ்வியராக இருக்கின்றனர் . இராமனைப் பெற்ற எனக்கு இடர் உண்டோ?' என்று தூயவளாகிய கைகேயி சொல்கிருள்.

அந்த கிலேயிலும் கூனியின் மனம் மாறுவதற்கு இடம் இருந்தது. இராமனத் தானே பெற்றதாக அல்லவா இவள் எண்ணி அன்பு செய்கிருள்? இவள் அன்பு வாழட்டும்' என்று அவள் கினைத்திருக்கலாம். அப்படி கினைப்பதுதான் சாதாரண கிலேயில் நிகழத் தக்கது. ஆனல் இப்போது, அந்த நேர்வழியை மாற்றி, வளைந்த வழியிலே, பிழையான வழியிலே, கதையை நடத்தும் சூத்திரதார கிைய விதி தூண்டுகிறது.

ஆழ்ந்தபே ரன்பினுள்

அனய கூறலும்

சூழ்ந்ததீ வினைகிகர்

கூனி சொல்லுவாள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/185&oldid=523387" இலிருந்து மீள்விக்கப்பட்டது