உவகையின் உருவம் 17
பாடுகள் அவனே ஆட்கொள்கின்றன. அதற்குமுன் அவனுடைய பேச்சு, செயல். குணம் இவை வேருக இருக்கும். அந்த உணர்ச்சியின் வசப்பட்டபோது அவை வேருகத் தோன்றும்.
பெருங் கவிஞர்கள் தம்முடைய காப்பியங்களில், சொல்ல இயலாத உணர்ச்சியின் உருவத்தை இத்தகைய மெய்ப்பாடுகளால் நுட்பமாகக் காட்டுவார்கள். எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி காட்டமாட்டார்கள். மெய்ப்பாடுகளில் பொதுவானவை சில உண்டு. அவற்ருேடு சூழ்நிலைக்கும் உணர்ச்சியுடையவரின் கிலேக்கும் ஏற்பச் சில மெய்ப்பாடுகளில் வேறுபாடு காணப்படும். உணர்ச்சிக்கு உருவம் இல்லையானலும் அந்தப் பாத்திரப் படைப்பைப் பார்த்தால், 'இதுதான் இந்த உணர்ச்சிக்கு வடிவமோ என்று வியப்படையும்படி இருக்கும். கம்பன் இந்த வித்தகம் நிரம்பப் பெற்றவன். அதைப் பார்க்கலாம்.
2
பல காலமாகச் சீதையின் மணத்தை எதிர்பார்த்து கிற்கிருர்கள். அவளுடைய தோழியரும் பிறரும். சிவபிரானுடைய வில் மலேபோலக் கிடக்கிறது. அதை வளேத்தவனேத்தான் சீதை மணம் புரிந்து கொள் வாள். 1.இது எப்போது யாரால் நடைபெறும்?" என்று ஏங்கி ஞர்கள் அவர்கள். அத்தகைய சமயத்தில் இராமன் வந்தான். அவன் வில்லே இறுத்தான்; அதனல் யாவரும் இன்பக் கடலில் மூழ்கினர்.
இராமன் மிதிலேயில் புகுந்து வரும்போதே அவனும் சீதையும் ஒருவரை ஒருவர் கண்டனர். அவர்கள் உள்ளம் கலந்தன. சீதை இராமனேயே கினைந்து, காதலால்
வ. 2