பக்கம்:அழியா அழகு.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவகையின் உருவம் 21

வடங்களும் குழைகளும் வான வில்லிடத் தொடங்குபு கலைகளும் குழலும் சோர்தர நுடங்கிய மின் என கொய்தின எய்தினுள் நெடுந்தடங் கிடக்தகண் நீல மாலையே. (தொடங்குபு: தொடக்கு பு என்பது எதுகை கோக்கி மெலிந்தது; சிக்கி என்பது பொருள், கலைகளும் ஆடை களும். சோர்தர - அவிழ. துடங்கிய - அசைந்த கொய்தின். விரைவில், தடம் - விசாலம்.)

முக்கியமான திருப்பங்களில் கம்பன் பாட்டின் சங்கத்தை மாற்றுவான். இங்கும் எழுசீர்க்க கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாகப் பாடி வந்தவன், நிகழ்ச்சியின் வேகத்தைப் புலப்படுத்த காற்சீரே யுள்ள கலிவிருத்த மாகப் பாடத் தொடங்குகிருன்.

லேமாலே சீதையை அணுகிவிட்டாள். அவள் உவகை என்னும் வெள்ளத்தில் மிதககிருள். உவகையே வடிவாக கிற்கிருள். சீதையின் தோழிகளில் அவள் ஒருத்தி. சீதை யிடம் இடம் காலம் அறிந்து மரியாதையுடன் பேசிப் பழகுகிறவள். மற்றச் சமயமானல் மெல்லச் சீதையை அணுகி அவள் அடியை வணங்கி அவள் குறிப்பை அறி துே "என்ன செய்தி' என்று அவள் கேட்க, இனிய மொழி களால் சொல்ல வேண்டியதைச் சொல்லும் பழக்கம் உள்ளவள். இப்போதோ அந்தக் கட்டுப்பாட்டுக்குள் அடங்கிய நீலமாலேயா அவள்? உவகையில்ை தன் கிலேயை மறந்து ஓடி வந்திருக்கிருள். வழக்கம்போல வந்து அடி வணங்கிளுளா? இல்லே.

வந்தடி வணங்கிலள். இன்னது செய்தாள் என்று சொல்லி அவள் உவகை கிலேயைப் புலப்படுத்தப் போகிருன் கவிஞன். அதற்கு முன் இது செய்திலள் என்பதலுைம் அதனை உணர்த்துகிருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/29&oldid=523231" இலிருந்து மீள்விக்கப்பட்டது