பக்கம்:அழியா அழகு.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அழியா அழகு

வேகமாகச் சுழலும் பம்பரத்தை ஒரு சிறு கோல் கொண்டு தொட்டால் அது சற்றே இடம் மாறிச் சுழலும். அப்படி ஆயிற்று, நீலமாலேயின் கிலே. தன்னை மறந்த அவளேச் சிதை, "சுந்தரி' என்று அழைத்து இவ்வுலகத்து கினேவுக்குக் கொணர்ந்தாள். அப்போதுதான் அந்தத் தோழிக்குத் தன் உணர்வு வந்தது. எதைச் செய்ய வேண்டுமென்று வந்தாளோ அதையே செய்யாமல் ஆடிப் பாடி கின்ற பேதைமையை உணர்கிருள், உவகைமயமாய் கின்றவள். தான் தோழி என்பதையும் முன் இருப்பவள் தன் தலைவி யாகிய சீதை என்பதையும் உணர்கிருள். அடடா! என்ன காரியம் செய்தோம் உவகை வெறி மூண்டு ஒரு கூத்தையே ஆடிவிட்டோமே!’ என்ற எண்ணம் வருகிறது. சீதையை வணங்க வேண்டியவள் அது செய்யாமல் கின்றதையும் எண்ணுகிருள். துயில் நீங்கியவளைப் போலவும் ஆவேசம் அடங்கியவளேப் போலவும் அமைதி பெற்று, தான் முதலில் செய்யவேண்டியதை இப்போது செய்யலாள்ை. சீதையைத் தொழுது, சொல்ல வேண்டிய செய்தியைச் சொல்லத் தொடங்கினுள்

தொழுது சொல்லுவாள். t

வந்து அடி வணங்காமல் ஓசை செய்து ஆடிப் பாடியவள் உவகையின் உருவமாகிய பெண், இப்போது உவகையை உள்ளத்தே அடக்கிய நீலமாலே ஆகிவிட்டாள். அப்போது வணங்காதவள், இப்போது தொழுதாள். அப்போது சொல் லாதவள், இப்போது சொல்லலாள்ை.

உவகை என்னும் உணர்ச்சி முதலில் தன்னை மறக்கச் செய்து, இயல்பான கிலேயை மாற்றிப் பல மெய்ப்பாடு களேத் தோற்றுவித்தது. கண்டவுடன் வணங்க வேண்டி யவள், சீதையின் சொல்லால் தன் கிலே பெற்ற பிறகே தொழுதாள்: செய்தியைச் சொல்லத் தொடங்கிள்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/32&oldid=523234" இலிருந்து மீள்விக்கப்பட்டது