பக்கம்:அழியா அழகு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுகச் செவ்வி 29

மணிமுடி குடியிருந்தால் மேலே கதை கடக்க இடம் இல்லை. அவன் காட்டுக்குப் போகத்தான் வேண்டும். இதுவரையில் அதற்குரிய அறிகுறி யாதும் உண்டாக வில்லே. கொடுமனக் கூனி தோன்றும்போது இந்தத் தலைமையான நிகழ்ச்சிக்கு அரங்கு ஏற்பாடாகிறது. பின்னல் நிகழவேண் டிய விகழ்ச்சிகள் உருவாவதற். குரிய கரு ஒர் இரவில் கைகேயியின் அந்தப்புரத்தில் தோன்றுகிறது. விடிந்தவுடனே அதன் வேலே தொடங்கி விடுகிறது. விடிந்தும் விடியாத அந்தக் காலேயில் இராமன் மகுடஞ் சூடும் காட்சிக்காக அமைந்திருந்த களமே மாறிவிடுகிறது. அதற்கென்று பலர் கூடி. ஏற்படுத்தியிருந்த வண்ணப் பூங்கோயிலேக் கைகேயி தன் சொல்லால் எரித்து விடுகிருள்; திரையைப் போட்டு விடுகிருள். இனி எதிர்பாராத காட்சிகள் வரப் போகின்றன. இராமன் இந்தத் திருப்பத்தில் கிற்கிருன்.

இது மிகவும் முக்கியமான இடம். கம்பன் இராமனுடைய கிலேயை - முகத்தில் தோற்றிய பாவத்தைதனியே எடுத்துச் சொல்ல வருகிருன்; அப்படிச் சொல்லு முன் அவனுக்குள் ஒரு கிளர்ச்சி எழுகிறது

கவிஞன் கவிதையைப் படைத்த பிறகு அந்தக் கவிதை இன்பத்தை காம் நுகர்கிருேம். அவன் கவியாக உருவாக்கும் உணர்ச்சிகள் முதலில் அவன் உள்ளத்தில் கருவாக சிற்கின்றன. அவை உருவாகும் வரையில் கவிஞன் ஒரு பெரிய இன்ப வேதனையை அடைகிருன்.. பிறருக்குத் தன் கவிதையிலே வடித்துச் சொல்வதற்கு முன் அவனே அந்த உணர்ச்சியில் ஆழ்கிருன்: இன்புறு கிருன். அந்த அந்தப் பாத்திரங்களாக கின்றும், அவர் களுக்குப் புறம்பே கின்றும் இன்புறுகிருன். அவனுடைய உள்ளமெனும் மேடையில் நிகழும் உணர்ச்சிக் கூத்தின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/37&oldid=523239" இலிருந்து மீள்விக்கப்பட்டது