பக்கம்:அழியா அழகு.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 அழியா அழகு

போகிருனே. கானும் கடலும் மலேயும் கடந்து செல்ல இருக்கிருனே' என்ற கினேவு உண்டாயிற்று. பல இடங். களுக்கும் சென்று காட்சி அளிக்கும் பொருள், கரிய, பொருள், நல்ல பொருள், உயர்ந்த பொருள், ஏதேனும் உண்டா? ஆம். மழை பெய்யும் கிலேயில் உள்ள கருமுகில் அவனுக்கு முன் கின்றது. இதுவே தக்க உவமை என்று: உறுதி செய்தான்.

மழை முகிலோ!

என்ருன். -

அப்போதும் அவனுக்கு மன நிறைவு பிறக்கவில்லை. மைப்படிக்கட் டேறி, மரகதப்படிக்கட் டேறி, மறிகடற். படிக்கட் டேறி, மழைமுகிற் படிக்கட்டும் ஏறியாயிற்று; இராமலாவண்யம் இன்னும் கைப்படவில்லை. கம்பன் இப் போது சளேத்துவிட்டான். குழந்தை எல்லாவற்றையும். அடுக்கி வைத்துப் பார்த்தும் உறி எட்டாவிட்டால் இரண்டு: கையையும் விரித்து, ஐயோ!' என்கிறது. அதுபோல இப் போது கம்பன் இருக்கிருன், இத்தனை உவமை சொல்லியும். எட்டாத அழகை எப்படிச் சொல்வது!

மையோ! மர கதமே! மறி

கடலோl மழை முகிலோ! ஒன்றும் சரிப்படாமல் இளேத்து ஏங்கி ஏமாந்து அலுத்து கிற்கிற கம்பகிைய குழந்தையும்.

ஐயோ! என்று கையை விரிக்கிறது!

மையோமர கதமோ மறி

கடலோ! மழை முகிலோ! ஐயோ! இவன் வடிவுஎன்பதோர்

அழியாஅழ குடையான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/56&oldid=523258" இலிருந்து மீள்விக்கப்பட்டது