பக்கம்:அழியா அழகு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழியா அழகு - 51

தலைவலியோ காய்ச்சலோ என்று ஐயப்படுவார்கள். அதே சொல்லேக் கம்பன் இராமனது பேரழகைக் காட்டும் உணர்ச்சிக் குறியாகக் கவியில் பதித்து அழகு செய்து விட்டான். இங்கே எனக்கு ஒரு கதை வினேவுக்கு வருகிறது. -

ஒருவர் தம்முடைய குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தைச் சுருக்கமாகக் கொண்டாடினர். ஐந்தாறு நண்பர்களே அழைத்து, மாலையில் சிற்றுண்டி அளித்தார். மேசை போட்டு அதன்மேல் அழகான பூவேலை செய்த துணியை விரித்துச் சிற்றுண்டி வகைகளைப் பிங்கான் பாத்திரங்களில் வைத்துப் பரிமாறச் செய்தார். பீங்கான் கிண்ணங்களும் தட்டுக்களும் வண்ணமும் அலங்காரங்களும் உடையனவாக இருந்தன.

விருந்து அருந்தப் போகும் சமயம் வீட்டுக்காரர் குழந்தை அங்கே வந்தது. மேசையின்மேல் விரித் திருந்த துணியைக் கண்டபோது அதற்கு அதனிடம் ஆசை உண்டாயிற்று. ஒடி வந்து அதை இழுத்தது. இதை யாரும் கவனிக்கவில்லை. தடுப்பதற்குள் துணியை இழுத்து விட்டமையால் மேசைமேல் இருந்த பீங்கான் கிண்ணங்களிற் பல கீழே விழுந்து உடைந்து விட்டன.

வீட்டுக்காரர் ஓடிவந்து குழந்தையை எடுத்துக் கொண்டார். பீங்கான் உடைசல்கள் அதன் காலப் பொத்துவிடுமே என்ற பயம் அங்கே வந்திருந்த கட்டிடக் கலையறிஞர் ஒரு சிறிய துண்டில் அந்த உடைசல்களே யெல்லாம் பொறுச்கி எடுத்துக்கொண்டார். இடத்தைச் சுத்தம் செய்த பிறகு வேறு பாத்திரங்களில் சிற்றுண்டிகளை வழங்கினர்கள். விருந்து முடிந்தது. -

சில மாதங்கள் கழித்து அந்தக் கட்டிடக் கலையறிஞர். தாம் ஒரு சிறிய வீடு கட்டி யிருப்பதாகவும் அதற்கு வர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அழியா_அழகு.pdf/59&oldid=523261" இலிருந்து மீள்விக்கப்பட்டது