மன மாற்றம்
ஒரு கிலேயில் இருந்த மனம் அதற்கு கேர் எதிரான விலக்கு மாறுவதென்ருல் அது எளிதில் நிகழ்வ தன்று. சூழ்நிலையின் வலிமையால் அந்த மாற்றம் கிகழும். கிலம் பிளந்து பூகம்பம் உண்டாவதற்கு முன் கிலத்துக் குள்ளே மறைவாகப் பல இயக்கங்கள் நடைபெறும். அவை முதிர்ந்து பின்பு கில நடுக்கமாக விளையுமாம். அப்படியே ஒருவருடைய மனம் மாறுவதற்கு முன் அதற்குக் காரண மான இயக்கங்கள் அவரை அறியாமல் மனத்தின் அடியில் கிகழும்; பின்பு அது வெளிப்படையாக உருவெடுக்கும்.
காப்பியக் கவிஞர்கள் இத்தகைய மனமாற்றத்தை அழகாகச் சித்திரித்திருக்கிருர்கள். கம்பன் படிப்படியாக மனம் மாறிவரும் போக்கை நுட்பமாகக் காட்டுகிருன். இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
1
ஒன்று கைகேயியின் மனமாற்றம். இது இராமாயணக் கதையில் மிகவும் முக்கியமானது. கைகேயியின் மனம் மாருவிட்டால் இராமனுடைய கதை இவ்வளவு பரந்து விரிந்து சிலவ இடமே இல்லாமற் போயிருக்கும். இதனைக் கம்பனே சொல்கிருன். -