பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அவமானமா? அஞ்சாதே!



வாலிபால் விளையட்டுக்குப் பெயர் கொடுக்குமாறு விளம்பரப் பலகையில் இருந்தது. பெயர் கொடுக்க வந்தேன் என்று வந்த விபரத்தை அவன் கூறினான்.

இங்கே நிற்கிறவன் எல்லாம் கிழிச்சுட்டான். நீ என்ன பண்ணப்போறே! உனக்கு வாலிபால் விளையாடத் தெரியுமா?

என் தோற்றத்தைப் பார்த்து அவர் அப்படி கேவலமான ஒரு முடிவுக்கு வந்திருப்பார் போலும்.

நான் மாவட்டப் போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். நான் நிறைய தனியார் (Special) போட்டிகளிலும் பங்கு பெற்றிருக்கிறேன் என்றான் அவன்.

அவர் சிரித்தார். அருகில் உள்ள விளையாட்டு வீரர்கள் அதாவது மாணவர்களும் சிரித்தார்கள்.

அவன் பேச்சில் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. ஒல்லியாக உயரமாக, பரமசாதுவாக ஒருவன் நிற்கிறான். இவன் மாவட்ட விளையாட்டு வீரன் என்கிறான். இவனை நாம் சேர்த்துக் கொண்டால், நமது மரியாதை என்ன ஆகும்? என்று இப்படி நினைத்துக் கொண்டார்களோ என்னவோ? அவர்கள் சத்தமாகச் சிரித்தார்கள். கைதட்டி கும்மாளத்துடன் சிரித்தபடி என்னைப் பார்த்தார்கள்? இல்லை வெறித்தார்கள்.

ஏப்பா? மாவட்ட வாலிபால் பிளேயர்னு சொல்ற! வாலிபால்ன்னா என்னான்னு தெரியுமா! ஒரு டீம்ல எத்தனை பேரு இருப்பாங்கன்னு. முதல்ல சொல்லுப் பார்ப்போம்? இயக்குநர் இப்படிக் கேட்டதுதான் தாமதம். அந்த அறையே இடிந்து விழுவது போல சிரிப்பலைகள் சிந்திச் சிதறின. அவனை கொத்திக் குதறின.

முகம் அறியாத அந்த இளைஞர்கள் பண்ணுகிற கேலியும் கிண்டலும், அவனை முகத்திலடித்தாற்போல் மோதின.