பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

19



இப்படி ஒரு அவமானமா?

ஒரு கைப்பந்தாட்டக் குழுவில் எத்தனை ஆட்டக்காரர்கள் இருந்து ஆடுவார்கள் என்ற அந்த சின்ன விவரங்கூடத் தெரியாத மூடனா நான்? முழு மூடனா நான்? என்று அவன் வெளியே வரத் தயாராக இருந்த கண்ணிரை அழுத்திக் கொண்டு, வெளியே வந்தான். கண்கள் சிவந்து கொள்ள ஆரம்பித்தன.

இவனெல்லாம் பிளேயர்ன்னு வர்றானுங்க காலத்தின் கோலம் என்று ஒருவன் சொல்ல, கரக்ட்டுடா ராஜா என்று திரு.தியாகராஜன் பேச, காதில் வாங்கிக் கொண்டே நடந்தான் அவன்.

பலர் முன்னிலையில் என்னைப் பற்றி தப்பாகப் பேசியிருந்தாலும் பொறுத்துக் கொள்வேன். என் விளையாட்டுத் திறமையை இப்படி இகழ்ந்து விட்டார்களே என்று அவன் இரவு முழுவதும் அழுதான். இறுதியாக ஒரு முடிவுக்கு வரும் வரை அழுதான். மனம் கசிந்து அழுதான்.

அந்த ஆசிரியரைப் போய் அவனால் திட்ட முடியாது. அங்கே கூடியிருந்த கேவலப்படுத்திய மாணவர்களை அவனால் அடிக்க முடியாது. அப்படி நினைப்பதே முட்டாள் தனம். அவர்கள் வெட்கித் தலை குனிவது போல, தன் பேச்சைக் கேட்டுப் பின்னால் நின்று விளையாடும் விளையாட்டு வீரர்களாக அவர்களை மாற்ற வேண்டும். ஆமாம் அவர்களுக்கு மேலாக உயர்ந்தாக வேண்டும்.

உனக்கு என்ன தெரியும் இந்த விளையாட்டில் என்று கட்ட இயக்குநரே தன்னிடம் வந்து கெஞ்சிக் கேட்க வேண்டும். அந்த நிலைமைக்கு உயர்ந்து தன்னை ஆளாக்கிக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான். அன்றிலிருந்து முழு நேரமும் விளையாடினான். விளையாட்டே வாழ்க்கை என்று தன்னை மாற்றிக் கொண்டான்.

அந்தக் கல்லூரியின் கைபந்தாட்டக் குழுவின் தலைவனாக வந்தான். இயக்குநர் திரு. தியாகராஜன் அவர்கள்