பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



40

அவமானமா? அஞ்சாதே.


அதற்குள், குடியால் அவரது உடல் நலம் கெட்டது. மூன்று பேர் பாகஸ்தராக இருந்த அந்த அச்சகமும் பிளவுபட்டது.

மணியின் மரணத்திற்குப் பிறகு, அச்சகமும் விற்கப்பட்டு விட்டது. மீண்டும் எனது அச்சகப் படையெடுப்பு முயற்சிகள் ஆரம்பமானது.

ஒருவரைத் தேடிப் பிடித்தேன். ஒரு புத்தகம் அச்சிட்டுத் தரவே ஒராண்டுக்கும் மேல் ஆக்கிவிட்டார். ஒருநாள் கோபத்துடன் போய், எனது புத்தகத்தை வேகமாக செய்து தர முடியுமா, முடியாதா என்று பரிதாபமாகக் கேட்டேன்.

அவரோ ஏற இறங்க என்னை அலட்சியமாகப் பார்த்தார். அவசரம் என்றால், நீங்களே ஒரு அச்சகத்தை ஆரம்பித்துக் கொள்ள வேண்டியதுதானே! உங்கள் வேகத்திற்கு என்னால் ஓடி வர முடியாது என்னிடம் வேலை தருவது என்றால், பத்து தடவை வந்து போவதைப் பார்க்கச் கூடாது. பிறகு உங்கள் செளகரியம் என்றார், பேச்சிலே பரிகாசம்

வாயடைத்துப் போய் நின்றேன்.

சார், உங்களால பிரஸ் ஆரம்பிக்க முடியாது. அதுல ஆயிரத்தெட்டு அவஸ்தை. நானே திண்டாடுறேன் நீங்கள்லாம் எம்மாத்திரம்? உங்களால் பிரசை நடத்த முடியாது. என்று பேசிக் கொண்டே போனார். பார்வையில் அகங்காரம்.

படிக்காத பிரஸ் உரிமையாளர் படித்து பட்டம் பெற்று புத்தகம் எழுதுகிற அளவுக்கு அறிவு பெற்ற ஒருவரைப் பார்த்து என்னால் முடியும், உன்னால் முடியாது என்பது போல, பேசிய பேச்சுதான், என்னை வெட்கத்துள் வீழ்த்தியது.

காசைக் கொடுத்துவிட்டு கேட்ட அவமானப் பேச்சு பல.