பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

51



திடீரென்று இரவு 1 மணிக்கு என் காம்பவுண்டு சுவரை அவர்கள் இடித்துவிட்டு, வீட்டின் பக்கத்துப் பாதையில் நடக்க ஆரம்பித்தனர். அதற்குப் பிறகு வீட்டைச் சுற்றிப் போலீஸ் காவல்.

இப்படியாக சிவில் கோர்ட்டுக்குப் போய் வழக்கு தொடுத்தேன். சைதாப்பேட்டை கோர்ட்டில் கிரிமினல் வழக்குத் தொடுத்தேன்.

நானிருக்கும் அந்த ஏரியா பயங்கரமான ஏரியா என்பதாக போலீஸ் ரெக்கார்டு குறித்திருப்பதும் எனக்குத் தெரியும். அவர்களோடு சண்டை போட்டு ஜெயிக்க முடியாது என்று, என் வீட்டிற்கு எதிரே உள்ள இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் குடியிருப்பவர்களும் அடிக்கடி கூறுவார்கள். அதுவும் புரியும்.

முதலையை விரட்ட முடிவு செய்து போராட்டம் தொடங்கிய பிறகு, ஒன்று முதலையை ஜெயிக்க வேண்டும் அல்லது மடிய வேண்டும். அப்படிப்பட்ட ஜீவ மரணப் போராட்டம் பல மாதங்கள் நடைபெற்றது.

அடிக்கடி டெம்போ ஒன்றை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவரிடமும் அவர்கள் போவார்கள். அன்றைய முதல்வரிடமும் (1987) போனார்கள். அவர்களுக்கு அவையெல்லாம் தோல்வியாக முடிந்தன.

பணம் பெறுவதில்தான் அவர்களுக்கு சந்தோஷம். பணம் செலவழிப்பது என்றால் ஒன்றுக்கு ஆயிரம் தடவை யோசிப்பவர்கள். அவர்களை கொஞ்ச காலம் ஆட்டம் காட்டிவிட்டு, பிறகு சமாதானம் என்ற பெயரில் பணம் கொடுத்து, பக்குவப்படுத்திவிட்டேன்.

தங்கள் தவறை அவர்கள் உணர்ந்தார்கள். சுரநநலக்காரன் ஒருவனின் துண்டுதலால் மோசம் போய்விட்டோம் என்றார்கள். நாங்கள் சமாதானமாகி விடுகிறோம் என்றார்கள், இனி, மாரியம்மன் சத்தியமாக உங்கள் பக்கம் வரவே மாட்டாம் என்று உறுதி கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டார்கள்.