பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அவமானமா? அஞ்சாதே!



நாம் என்னவாக இப்போது இருக்கிறோம்?

நாம் என்னவாக ஆகப் போகிறோம்?

நமக்கு அந்த வாய்ப்பு வருமா? கிடைக்குமா?

வந்தாலும் நிலைக்குமா? குலைக்குமா?

இப்படியெல்லாம் தப்படி போடுகிற கனவுக்குதிரைகள் கவண்கல்லைபோல வேகம் கொண்ட கலக்கப் புதிர்கள் நெஞ்சுக்குள்ளே!

ஆமாம்! இதுதான் நமது வாழ்க்கை மனித வாழ்க்கையின் மாறாத குரல். மறையாத நிரல்.

- எங்கே போகிறோம் என்று தெரியாமலே ஒரு நீண்ட பயணம். அதற்குப் பெயர்தான் வாழ்க்கை

எதுவரை தொடரும்? எங்கே நிற்கும்? என்று தெரியாமல், தெரிந்து கொள்ள முயலாமல், தேடிப் போகும் முயற்சிக்குப் பெயர்தான் வாழ்க்கை.

கரையைத் தொடமுடியாத அலைகள் போல, கனிவதற்கு முன்பே விழுந்து விடுகிற காய்கள் போல, இசையை பழகிக் கொள்வதற்கு முன்னேயே எழுகிற அபசுபரம் போல, வாழ்க்கை வந்து போகிறது.

இதுதான் வாழ்க்கையா என புரிந்து கொள்வதற்கு முன்பே எல்லாமே முடிந்து போகிறது.

வாழ்க்கையை ஒரு பழைய ஆடைக்கு ஒப்பிட்டுப் பேசுவார்கள்.

கிழிந்த ஆடையை ஒருபுறம் தைக்கிற போதே மறுபுறம் கிழிந்து போவது போல.

ஒரு துன்பம் வந்து தீர்வதற்குள், அடுத்தடுத்து அனலாய் புனலாய் ஆட்டம் போடுவதுதான் வாழ்க்கை

இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள் என்று மகிழ்வதற்குள் மற்றெரு அவலச் செய்தி.