பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

அவமானமா? அஞ்சாதே!



சிறு வயதில் ஒரு லட்சியம்!

சிற்றன்னையிடம் பட்ட அவமானம், அந்தச் சிறுவனின் சிந்தையிலே ஒரு வைராக்கியத்தை விதைத்தது.

உலகுக்கு நான் யார் என்று காட்டுவேன். உயர்ந்து காட்டுவேன் என்று திமிறி எழுந்தான். செய்து காட்டினான்.

அந்தத் தினவும் தீரமும் உங்களிடமும் உண்டு.

அப்படிப்பட்ட அறிவும் செறிவும், ஆற்றலும் ஆக்கமும் உங்களிடமும் நிறைய உண்டு.

இளைஞர்களைப் பார்த்து கொட்டிக் கிடக்கும் செங்கல் என்றும், முதிர்ந்தவர்களைப் பார்த்து கட்டி முடித்த கட்டிடம் என்றும் ஓர் அறிஞர் கூறினார்.

கொட்டிக் கிடக்கும் செங்கல்லைக் கொண்டு கோயிலும் கட்டலாம் கழிவறையும் கட்டலாம்.

கட்டுவதற்காக விரும்பி செயல்படுவோரின் செய்கை தான் அவரை கம்பீரமாக நடத்திச் செல்கிறது.

கட்டுவதற்காக விரும்பி முயல்பவரின் கொள்கைதான் அவரை கூட்டி நடத்திச் செல்கிறது.

சோம்பேறியாக இருந்தால், சுரணை இல்லாதவராக இருந்தால், சோர்ந்து கிடப்பார்கள். எது எளிதோ அதைச் செய்து சந்தோஷப்படுவார்கள். அஸ்திவாரத்திலேயே ஆழ்ந்து போவார்கள்.

முயற்சியும் முனைப்பும் உள்ளவர்கள் மற்றவர்கள் மனதிலே இடம் பிடிப்பார்கள். முடிப்பார்கள்.

இளமை என்பது எங்கே தொடங்குகிறது என்று உங்களுக்கே தெரியும்.

Teen Age என்பார்கள். Teen Age 13-ல் 13 என்பது நல்ல எண் அல்ல என்பது பலரின் நம்பிக்கை. 13ஆம் நம்பர் எல்லோரையும் பயமுறுத்தும் ஒன்று.