பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அவமானமா? அஞ்சாதே!



இளையவர்கள் ஒழுக்கமற்ற காரியங்களில் இறங்கி சீரழிவதும் நிறைய நடக்கிறது.

ஏன் அப்படி என்றால், Teen என்பதற்குரிய பொருள் அப்படித்தான் இருக்கிறது.

Teen என்ற ஆங்கிலச் சொல்லுக்கு வருத்தம், துன்பம், இடையூறு, கேடு என்று பல அர்த்தங்கள் உண்டு.

இந்த Teen Age-ல் பெரியவர்கள் புத்திமதிகளைக் கேட்காதவர்கள். கேவலப்படுத்துபவர்கள், கீழே போட்டு மிதிப்பவர்கள் எல்லோரும், இருபத்துக்குள்ளேயே ஒரு முதுமை தனத்தை அடைந்து விடுகிறார்கள்.

உடலில் நோய், உள்ளத்தில் கவலை, உணர்வுகளில் நம்பிக்கையின்மை, வாழ்விலே கசப்பு, வழியிலே துன்ப நெருப்பு.

இப்படி வதைப்பட்டு வாழ்விழந்து வீழ்கிறார்கள். ஆக, இளமை என்பது இனிய பொக்கிஷம். வலிமையை வரவழைக்கும் மந்திரப் பெட்டி, புதுப்புது சக்திகளை பொதிந்து வைத்திருக்கும் புதையல்,

அப்படிப்பட்ட இளமையை நீங்கள் எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

கொக்கு போல, கோழி போல, உப்பு போல, 'உம்' போல.

விளக்கம் தொடர்கிறது.

இளைஞர்களே! உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் தான்.