பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அவமானமா? அஞ்சாதே!



எப்படியும் வாழலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்படி வாழ்வது என்பதில்தான் சிக்கல்கள், விக்கல்கள், முக்கல்கள், முனகல்கள்.

இதோ! இளைஞர்கள் இப்படித்தான் வாமவேண்டும் என்று வற்புறுத்துகிற வழிகாட்டல்கள். இவற்றை...

இளைஞர்கள் எல்லோரும் பின்பற்றலாம். கொக்காக வாழ வேண்டும். கோழியாக வாழ வேண்டும். உப்பாக வாழ வேண்டும் 'உம்'மாக வாழ வேண்டும்.

என்ன சொல்கிறீர்கள்.

எங்களை இளக்காரமாகவா எண்ணிவிட்டீர்கள்?

ஆடு மாடு என்று திட்டுவார்கள். நீங்கள் கொக்கு கோழி என்று திட்டுகிறீர்களா என்று கேட்பது புரிகிறது.

ஆடு மாடு என்பது திட்டமல்ல. தீர்க்க தரிசனமான வாழ்த்துக்கள்.

ஆடாக வாழுங்கள், மாடாக வாழுங்கள் என்றால் அது வசையல்ல. வாயாராக்கூறும் வாழ்த்துக்கள்.

ஆடு என்றால் வெற்றி என்று அர்த்தம்.

மாடு என்றால் செல்வம் என்று அர்த்தம்.

இப்போது கூறுங்கள் ஆடு மாடு என்பது தவறா அதுபோலத்தான் கொக்கும் கோழியும்.

குளக்கரையிலே ஒற்றைக் காலில் நின்றுக் கொண்டு, கண் கொட்டாமல், கவனமாக காத்துக் கொண்டிருக்கும் கொக்கின் நினைவு, இந்நேரம் உங்கள் கண்முன்னே வந்திருக்க வேண்டுமே!

ஏன் இப்படி கவனமாக நிற்கிறது? தவம் செய்வது போல, ஏன் தனித்து நிலைத்து நின்று கொண்டிருக்கிறது?

ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் அளவும் வாடி நிற்குமாம் கொக்கு என்பது ஒரு பாட்டு