பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

63



தண்ணிரிலே துள்ளித் துள்ளி ஓடி வருகின்ற மீன்களையெல்லாம், கண்கொட்டாமல் பார்த்துக் கெண்டிருக்கிறது. பசியோடுதான். பசிந்திருந்தாலும், பக்கிபோல பாய்ந்துவிடவில்லை. பரபரப்படையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது. பெரிய மீனுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?

அல்ல. பெரிய மீன் என்று அதற்கு அர்த்தமல்ல. தனக்கு உரிய மீன் என்றுதான் அர்த்தம்.

தனது வாய் கொள்ளுகின்ற அளவுக்கு பெரிய மீன் தனக்குத் தேவைதான்.

பசியைப் போக்கும் உணவுதான் ஆனால் சிறியது வேண்டாம் என்று பெரிய மீனைப் பிடித்தால் வாயடங்காது. பசியும் தீராது. பெரியதைப் பிடித்தால் பிரச்சனைகள் வரும் என்று அது தெரிந்து வைத்திருக்கிறது.

இளைஞர்களுக்கும் கொக்குக்கும் எப்படி சம்பந்தம் என்று புரியவில்லையா? என்று கேட்பது புரிகிறது.

பசித்த கொக்கு பதறாமல், வெளியில் மழை என்று பாராமல் நிற்கிறது. காலம் கனியட்டும் என்று பொறுமை காக்கிறது. விலகாமல் பார்க்கிறது.

வேண்டிய இரை வரட்டும் என்று பொறுமை காக்கிறது. விரும்பி நிற்கிறது.

அற்ப இரைக்காக ஆசைப்படவில்லை.

அளவுக்கு அதிகமான பெரியது வந்தாலும் அவசரப்படவில்லை.

தன்னால் கவ்வ முடியும். தன்னால் சிரமமின்றி உண்ண முடியும். தன்னால் சந்தோஷப்பட முடியும் என்று எந்த மீனுக்காக காத்திருந்ததோ, அது வந்ததும் அடைந்ததும் ஆனந்தமாகப் பறந்துவிடுகிறது.

இதுதான் கொக்கின் குணாதிசயம்.