பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



1. அவமானமா?

அப்படி என்றால் என்ன?


ருவர் தன் வாழ்க்கையில் உயர்வதற்கும், ஒப்பற்ற சாதனை படைப்பதற்கும். உலகப்புகழ் அடைவதற்கும் அறிவு மட்டும் போதாது. அதிர்ஷ்டம் வேண்டும். அது மட்டுமா! கீழிருந்து தள்ள, மேலிருந்துதூக்க ஆட்களும் வேண்டும்.

பரிந்துரைகள் வேண்டும். பணத்தின் உதவி வேண்டும். பதவியிலுள்ளோர் அருள் வேண்டும் என்றெல்லாம் கூறுவார்கள்.

இவையெல்லாம் புறத்தைச் சார்ந்த ஊக்கிகள்தான். வெளியுலக சக்திகள் துணிந்து முயற்சிக்கின்றததூக்கிகள்தான். ஆனால், அகத்தைச் சார்ந்த எழுச்சிகள் ஏற்படுகின்ற போதுதான் ஒரு மனிதன் உத்வேகம் கொள்கிறான். உற்சாகம் அடைகிறான். உணர்வுகளை நன்கு ஒருமுகப்படுத்துகிறான்.

சூழ்நிலையின் சுற்றுப்புறத் தாக்குதல்களை, தம்மைச் சுற்றி வாழ்கிற மனிதர்களின் சூட்சுமப் புத்திகளை, உன்னிப்பாகக் கவனித்து அவற்றை அனுசரித்துப் போகவும் கற்றுக் கொள்கிறான்

இடுக்கண்கள் என்கிற துன்ப வெள்ளத்தில் மிதக்கக் கற்றுக் கொள்கிறான். பெறுகிற அனுபவங்கள் மூலமாகப் பறக்கக் கற்றுக்கொள்கிறான்.

இப்படிப்பட்ட அக எழுச்சியை எழுப்புவது எது? தட்டி எழுப்புவது எது? குறுகுறுத்த நெஞ்சத்தைக் கொட்டி முழக்குவது எது? அவமானம்தான்.

அவமானமா!

ஐயோ! அவமானமா! அது என் வாழ்க்கையில் கடந்தால் நான் செத்தே போய்விடுவேன் என்று ஜகதல