பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

அவமானமா? அஞ்சாதே



வெளிப்படுத்துகிற விதத்தில் வித்தியாசம் இருக்கிறது. மற்றவர்கள் முணுமுணுக்காமல், முறைக்கமல், மாற்றுக் கருத்தினைக் கூறாமல், மரியாதையுடன் ஏற்றுக் கொள்ளச் செய்வதில்தான் செயலாண்மை இருக்கிறது.

மற்றவர்களை நம் வழிக்குக் கொண்டுவர நாம் கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டும். அதற்குத்தான் அடக்கம் என்று பெயர்.

ஒரு கூட்டத்தில் போய் நாம் கடைசி வரிசையில் உட்கார்ந்து விடுகிறபோது நமது, மதிப்பு குன்றி குறைந்து போய்விடாது.

முன்வரிசையில் போய் உட்கார்ந்து விடுவதினாலேயே பெருமையும் புகழும் வந்து குவிந்துவிடாது.

முன்வரிசையில் அமர்ந்திருக்கிறபோது, நமக்கும் மேலே பெயர் பெற்ற ஒருவர் வந்து, அவருக்கு இடம் தருவதற்காக நம்மை எழுப்பிவிட நேர்கிறபோது, நமக்கு நேர்கிற அவமானத்தை நினைத்துப் பாருங்கள்.

கடைசி வரிசையில் அமர்ந்திருக்கும் உங்களை, பலர் பார்க்கும்போது கூப்பிட்டுக் கொண்டுபோய் முன் வரிசையில் அமர்த்தினால், அப்பொழுது உங்கள் பெருமை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.

மற்றவர் உங்களை உயர்த்தாமல், நீங்களே உயர்வாக எண்ணி உயர்த்திக் கொள்கிறபோது பெருமை, தற்பெருமை தற்போதம் என்றே நினைக்கப்படுகிறது.

உங்களை நீங்களே தாழ்த்துகிறபோது பிறர் தாழ்த்த வாய்ப்பில்லை. ஒரு அங்குலம் உயர்ந்தாலும் அது உயர்வுதானே!

1. பொற்காலம் 2, நற்காலம் 3. கற்காலம் 4 பிற்காலம் 5. முற்காலம் 6. மற்காலம் 7 வற்காலம்.

ஒவ்வொருவரும் இந்த ஏழு காலங்களில்தான் வாழ்ந்ததாக வேண்டும். எப்படி என்பதைத் தொடர்ந்து காண்போம்.