பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அவமானமா? அஞ்சாதே!



வன்காலமாகிய வற்காலத்தில் வில்லாக வளைந்து, கூடாகத் திரிந்து, 'கொடுமையடா வாழ்வு, போதுமடா சாமி' என்று புலம்புகிற காலம் இது.

அன்பு இளைஞர்களே!

இங்கே நாம் எடுத்துக் காட்டிய ஏழு காலங்களிலும் உங்கள் இதயத்தை ஏற்று நிலைநிறுத்தப் பார்த்துக் கொள்ளுங்கள்.

கருவானபோதே கர்ப்பச் சிதைவில் போயிருக்கலாம். மற்றும் பிறந்த உடனே பெருந்தீங்குகளில் சிக்கி விட்டிருக்கலாம்.

ஆனால் ஒன்று. மனித உடலெடுத்து, உயிர் பெற்று விட்டாலே மாபெரும் கஷ்டங்களும் நஷ்டங்களும்தான் வந்து சேரும். ஆமாம், வந்தே தீரும்.

எந்தக் காலமாக இருந்தாலும், அந்தக் காலத்தில் எதிர்பாராதவைகள் நடந்து நடந்து, நம்பிக்கையை ஒடித்துவிடும். இஷ்டப்பட்டவைகள் எதுவும் நடக்காமல் இருந்து, மனச் சமாதானத்தை அழித்தேவிடும்.

பின் எதற்காக இந்த வாழ்வு வாழ வேண்டும் என்றால், அங்கேதான் மனிதத்தன்மை மலர்ந்த முகம் காட்டி அழைக்கிறது.

மனிதன் வாழ்வில் மூன்று நிலைகள் உண்டு.

ஒன்று மனிதன். இரண்டு புனிதன். மூன்று கினிதன்.

நீங்கள் எப்படி வாழ்வீர்கள்? எப்படி வாழ வேண்டும் என்ற இந்த மூன்று சொற்கள் தாம் உங்களை வாழ்வித்து வழிகாட்டுகின்றன. வழிகாட்டப் போகின்றன.

எப்படி? எப்படி?