பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

அவமானமா? அஞ்சாதே


ஏனென்றால், கேடு கெட்ட வாழ்வு வாழ்பவர்களின் உடல் கெட்டுப் போவதால், இன்பத்திற்குப் பதிலாக துன்பமும், அருளுக்குப் பதிலாக இருளும், சுகிப்பதற்குப் பதிலாக மயக்கமும் வரும். இப்படி வாழ்வதும் ஒரு வாழ்வா

நமது வாழ்க்கையின் இலட்சியம் என்ன?

சுகமாக வாழவேண்டும். மகிழ்வோடு வாழ வேண்டும்.

சுகம் என்பது உடலால் கிடைப்பது மகிழ்ச்சி என்பது உடல் கெடுகிறபோது எப்படி கிடைக்கும்?

கோடி கோடியாக பொருள் இருந்து என்ன பயன்? ஆயிரம் பேர் மதிக்கத்தக்க அந்தஸ்து, அதிகாரம் இருந்து என்ன பயன்?

கேவலமான, கீழ்த்தரமான கேடுகெட்ட, பார்த்தவர்கள் முகம் சுளிக்க வாழ்கிற முறை எளிதான முறை. அதைச் செய்ய ஆயிரம் பேர்கள், கோடி பேர்கள் உண்டு. அந்தப் பெயரை ஒரு நொடியில் பெற்றவிடலாம் முடியும்.

நல்லவன் என்ற பெயரெடுக்க நாளாகும். உழைக்க வேண்டும். உழைப்பைத் தொடர வேண்டும்.

இதனால் என்ன பயன்? உடல் நலமாக, மனம் தெளிவாக இருக்கிறது. அதனால் சுகமும் சொர்க்கமும் கிடைக்கிறது.

உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் அமைய வேண்டும் என்பதை நீங்களே சிந்தியுங்கள். நிதானமாக ஒரு முடிவுக்கு வாருங்கள். நினைத்ததை உறுதியோடு செயல்படுங்கள், செயல்படுத்துங்கள்.

அந்த எதிர்காலம், அற்புதமான காலமாக அமையும் சூரிய ஒளி பார்த்து உயிரினங்கள் உற்சாகம் அடைவதைப் போல, உங்களைப் பார்த்து பல முகங்கள் மலர்வதைக் காணமுடியும்.

அந்த இன்பத்தைவிட கோடிப் பணமா பெரிது?