பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15. தேடுங்கள் தெரியும்


பெற்றிருக்கும் மனிதப் பிறவி, பெரும் பேறுக்கு உரியது. நீங்கள் அதை பெருமையாகக் கருத வேண்டும் பிரச்சனைகள் நிறைந்த வாழ்வை, புன்முறுவல் காட்டி எதிர்க்க வேண்டும். போராட வேண்டும்.

புதிரான பிரச்சனைகளைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்ய வேண்டும். அதற்குத் தேவை பொறுமையான தேடல்கள். திறமையான செயல்கள்!

எதைத் தேட வேண்டும் யாரைத் தேட வேண்டும்?எப்படித் தேட வேண்டும்? எதற்காகத் தேட வேண்டும்?

கிளம்பியுள்ள கேள்விகளுக்கு கிடைக்கக் கூடிய பதில்தான், உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பியாகும். வளமாக வாழ்விக்கும் அற்புதமாகும்.

மனித வம்சத்துக்கே ஒரு மகத்தான குணம் உண்டு. மற்றவர்களைப் பற்றியே சதாகாலமும் நினைத்துக் கொண்டிருப்பதில், பேசுவதில் இன்பம் மற்றவர்களை வேடிக்கை பார்க்கும் போதோ மகா இன்பம். மற்றவர்களை மட்டமாக விமர்சிக்கிறபோது மகா திருப்தி. மற்றவர்கள் கஷ்டப்படுவதைக் காணும்போது பேரின்பம்.

இப்படி மற்றவர்களைப் பற்றியே கஷ்டப்பட்டு செய்திகளைத் திரட்டி, மனப்பாடம் செய்து, மனம் போலப்பேசி மகிழ்ச்சி அடைகிற கூட்டம் நமது மாண்புமிகு மனிதக் கூட்டம்தான்.

மற்றவர்கள் நினைப்பிலேயே தங்களைப் பற்றிய நினைவில்லாமல், தங்கள் மீது மண்ணைப் போட்டு மூடிக்கொண்டு, மண்ணுக்குள் மண்ணாய் போகிற மனிதர்களைப் பற்றி என்ன சொல்ல?

நான் யார்? என்று கேள்வி கேட்க வைத்து, உங்களை வேதாந்தியாக ஆக்கவில்லை. அது ஆத்ம சிந்தனை ஆன்மீகக் கலையாகிவிடுகிறது. நம்மை பிறக்க வைத்திருக்கும் பெற்றோரின் நிலைமை சுற்றியிருக்கிற சூழலின் நிலைமை