பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

87


தெரிந்து கொண்டு விட்டால், உங்களின் உண்மை சுயரூபம் புரிந்துவிடும்.

உண்மைத் திறமையை தெரிந்துகொண்ட பிறகு, தொடர்ச்சியாக ஒருவர் செய்ய வேண்டியது என்ன? அதை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதுதானே!

அதுதான் இல்லை. இங்கேதான் மக்கள் ஒருவருக்கொருவர் மாறுபட்டு, வேறுபட்டு நிற்கின்றார்கள்.

1. ஒரு காரியத்தை செய்துவிட ஒருவர் நினைக்கிறார். அந்தக் காரியத்தைச் செய்தால், தடைகள் வந்து தாக்குமோ? இடையிலே நின்று போகுமோ? பின்னால் நமக்கு கஷ்டங்கள் ஏற்படுமோ? மற்றவர்கள் கேலி செய்வார்களோ? மானம் போய்விடுமோ என்று பலவாறாகத் தங்களுக்குள் யோசித்து, பயந்து, தன்னம்பிக்கை இழந்து, தடுமாறித் தத்தளித்து பின்வாங்கி விடுவது. இவர்கள் எதையுமே செய்ய முடியாத அளவுக்கு கையாலாகாதவர்கள். ஆரம்பிக்கவே அஞ்சும், ஆற்றல் அற்றவர்கள். பயந்தாங்கொள்ளிகள், கோழைகள்.

2. இரண்டாவது தரத்தினர், ஒரு காரியத்தை ஆரம்பித்துவிடுவார்கள். தைரியமாகவே தொடங்கி விடுவார்கள். தடையில்லாமல் காரியம் நடக்கிறவரை, தொடர்ந்து வருவார்கள் ஏதாவது இடையூறுகள் எழுந்தால், அவற்றை எதிர்கொள்ள இயலாமல், தாக்குப் பிடிக்க முடியாமல், பாதியிலே விட்டுவிட்டுப் பறந்து விடுவார்கள்.வேலையும் அநாதையாகிவிடும். இப்படிப்பட்டவர்கள் இரண்டாந்தர மக்களாகிவிடுகிறார்கள்.

அதற்குக் காரணம், தங்களின் விதிதான் போதாத காலம், சனி பிடித்த ஜாதகம் என்றெல்லாம் மற்றதன் பேரில் பழியைப் போட்டுவிட்டு, மறைந்து கொள்வார்கள்

3. மூன்றாவது தரத்தினம் முதல் தரமாந்தர்கள் ஆவார்கள். எடுத்த காரியத்தை முடித்துவிடுகிறவரை, முயற்சிப்பார்கள். முடிவில் தோல்வியோ, வெற்றியோ என்பதைப் பற்றிக் கவலையில்லாமல் காரியத்தை செய்து கொண்டே இருப்பார்கள்