பக்கம்:அவமானமா அஞ்சாதே.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

95


ஒன்று சொல்கிறேன். கேட்டு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்டார்.

முடியுமா? எந்தக் கேள்விக்கும் என்னிடம் பதில் உண்டு. கேட்டால், கிடைக்கும். என் பதிலைப் பார்த்து, நீங்கள்தான் கேவலப்படுவீர்கள் என்று கேலியாகப் பதிலுரைத்தான்.

புத்தர் இப்படிப் பேச ஆரம்பித்தார்.

"உன்னிடம் விலை உயர்ந்த பொருள் ஒன்று இருக்கிறது. அதைக் கொண்டு வந்து, நீ எனக்குப் பரிசாக அளிக்கிறாய் நான் அதை வேண்டாம் என்று மறுத்து விடுகிறேன்.அப்போது நீ என்ன செய்வாய்” என்று கேட்டார். இதென்ன பெரிய கேள்வி. நீங்கள் மறுத்துவிட்டால், அதை நானே திரும்பவும் எடுத்துக் கொள்வேன் என்றான் அந்தத் தீயவன்.

நல்லது. நான் மறுத்ததை நீ எடுத்துக் கொள்வாய் அல்லவா! இப்போது இதுவரை நீ திட்டிய கெட்ட வார்த்தைகளை பேசிய இழிமொழிகளை எல்லாம் பரிசாக எனக்குத் தந்தாய் ஏற்றுக் கொள்ளப் பிரியமில்லாத நான், உனக்கே பரிசாகத் திரும்பவும் தந்துவிட்டேன். எல்லாம் உனக்கே வந்துவிட்டது, ஏற்றுக்கொள் என்றார்.

வீணான வார்த்தைகள் வீசி அவமானப்படுத்திய வம்பன், இதைக் கேட்டு வெட்கித் தலைகுனிந்தான்.

இந்த இனிய முறையைத் தான் நாம் பின்பற்ற வேண்டும். ஏசிப்பேசி அவமானப்படுத்துபவர்களுக்கே, அவற்றை நாம் சமர்ப்பணம் செய்துவிடும் சாகசக்கலையை, நம்மிடையே வளர்த்துக் கொள்வோமானால் வளர்ச்சி நமக்கு வீழ்ச்சி அவர்களுக்கு.

என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை மன்னியுங்கள் பிதாவே என்று ஏசுநாதர், எதிர்த்தவர்களை வெட்கப்பட வைத்தாரே! அதையும் நம் நினைவில் ஏற்றுக்கொள்வோம்.

வீதியில் போகும்போது விளையாடும் சிறுவர்கள் வீசுகிற கல், நம்மேல் படும்போது அதற்காக நாம் நின்று சண்டை போடுவதில்லை. வம்படி வழக்கும் செய்வதில்லை. சற்று நேரம் சலனப்பட்டுப்போய், மீண்டும் சமாதானமாகி